நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி
சென்னை: தேர்தல் களத்தில் முக்குலத்தோர் சமூக வாக்குகளைத் தன் பக்கம் ஈர்க்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டு வரும் தீவிரமான சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இதற்கு நடுவில் சசிகலாவின் அரசியலும், வியூகமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது..
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புடனான மோதலுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் தனது அரசியல் எதிர்காலத்தைத் தக்கவைத்துக்கொள்ள முக்குலத்தோர் சமூக வாக்குகளை முழுமையாக நம்பியிருக்கிறார்.

இதற்காக அவர் மேற்கொண்டு வரும் தீவிரமான சுற்றுப்பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தென் மண்டலத்தில் தனக்கிருக்கும் பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்கொள்ளவும், தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தவும் அவர் நேரடியாகக் களமிறங்கியுள்ளதாக தெரிகிறது..
சமூக உணர்வுகளைத் தூண்டும் வகையிலும், அரசியல் மாற்றங்கள் குறித்தும் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அந்தச் சமூக மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி
இதற்காக திட்டமிட்டு ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாகச் சென்று முக்கியப் பிரமுகர்களையும், பொதுமக்களையும் சந்தித்து வரும் அவர், தனது செல்வாக்கை மீண்டும் நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.
அதேசமயம், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புடனான மோதல் போக்குக்கு மத்தியில், இந்தப் பயணம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு முக்கியமான சோதனையாகவே கருதப்படுகிறது.
தென் மண்டலத்தில் தனக்கு இருக்கும் பாரம்பரிய வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவும், மற்ற கட்சிகளுக்கு செல்லும் வாக்குகளைத் தடுக்கவும் அவர் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுகிறார். தன்னுடைய ஆதரவாளர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தொகுதியில் நிலவும் அதிருப்திகளைச் சரி செய்யவும் இந்த சந்திப்புகளை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது.
தென்மண்டல வாக்குகள் யாருக்கு
சமூக வாக்குகள் பிரிந்துவிடாமல் ஒருமுகப்படுவது மட்டுமே தனது அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், இந்தச் சுற்றுப்பயணத்தை மிகவும் நுணுக்கமாகவும் விறுவிறுப்பாகவும் ஓபிஎஸ் முன்னெடுத்து வருகிறாராம்..
இதற்கு நடுவில், சசிகலா மற்றும் ராமதாஸ் இடையிலான கூட்டணி வட மற்றும் தென் மாவட்டங்களில் வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது. பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி மற்றும் ஜிகே மணி ஆகியோர் சசிகலாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது, தமிழக அரசியலில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை தொடங்கி வைத்துள்ளது.
இந்த கூட்டணி குறிப்பாக முக்குலத்தோர் மற்றும் வன்னியர் வாக்குகளை ஒருமுகப்படுத்தினால், அது பிரதானக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பெருமளவில் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்..
நடிகர் கார்த்திக்
புகழ்பெற்ற நடிகர் கார்த்திக், சசிகலாவை சந்தித்து தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தது தென் மாவட்ட அரசியலில் கூடுதல் விறுவிறுப்பை சேர்த்துள்ளது. அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி மற்றும் மனித உரிமை காக்கும் கட்சி எனப் பல்வேறு அரசியல் முன்னெடுப்புகளைச் செய்த கார்த்திக், இபோது சசிகலா - ராமதாஸ் கூட்டணிக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்..
அதிலும் தென் மாவட்டங்களில் இவருக்கு இருக்கும் செல்வாக்கு, குறிப்பாகக் குறிப்பிட்ட சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஒரு முக்கிய வியூகமாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த முறை, சீமான் சசிகலாவை சந்தித்துப் பேசியிருந்தார்... அது எதற்கான சந்திப்பு என்று இதுவரை உறுதியாக தெரியவில்லை.. இப்போது கார்த்திக்கும் சந்தித்து பேசியிருக்கிறார்.. எப்படியும் கார்த்திக்குக்கு ஒரு சீட் கன்பார்ம் என்றாலும், இந்த சந்திப்பும், அவரது வருகையும் தென்மண்டலத்தின் கவனத்தை பெற்றுள்ளது. அத்துடன், தென் தமிழகத்தில் ஒரு மூன்றாவது முனை வலுவடைவதையும் நமக்கு காட்டுகின்றன.
முக்குலத்தோர் வாக்கு வங்கி
இந்த அதிரடி மாற்றங்கள் ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக முக்குலத்தோர் வாக்குகள் ஓ.பி.எஸ், சசிகலா மற்றும் கார்த்திக் ஆகிய மூவருக்கும் இடையே எப்படிப் பிரியப்போகிறது என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால், தென்மண்டல அரசியலில் நிலவும் இந்தச் சமூக ரீதியான ஒருங்கிணைப்பு மற்றும் புதிய கூட்டணிகள் தமிழக சட்டமன்றத் தேர்தலின் போக்கையே மாற்றியமைக்கக் கூடியவை. வாக்குகளை ஒருங்கிணைப்பதிலும், அதிருப்திகளைச் சரிசெய்வதிலும் இந்தத் தலைவர்கள் காட்டும் வேகம், தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.
இந்த அரசியல் போட்டிகளில் , இறுதி வெற்றி யாருக்கு என்பதும், யாருடைய வாக்குகள் பிரியும், முக்குலத்தோர் வாக்குகள் யாருக்கு தான் போகப்போகிறது என்பதெல்லாம் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications