திமுகவில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாச்சலம்! பெருந்துறை கேட்டு அடம்! இபிஎஸ் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் இருந்து விலகிய தோப்பு வெங்கடாச்சலம், தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் வரும் இடைத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் தன்னை வேட்பாளராக அறிவிக்குமாறு தோப்பு வெங்கடாச்சலம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது.

கொங்கு மண்டலத்தில் அதிமுகவில் கொடி கட்டி பறந்தவர் தோப்பு வெங்காடலம். ஈரோடு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியவர். இவர் பெருந்துறை சட்டசபைத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

Thoppu Venkatachalam

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியவர். 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தோப்பு வெங்கடாசலத்திற்கு தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர், அந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.

அப்போது அவருக்கு திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரிடம் தோப்பு வெங்கடாசலம் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களால் திமுகவின் எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவருக்கும் அமைச்சராக இருந்த முத்துசாமிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இவர்தான் தனது தேர்தல் தோல்விக்கு காரணம் என தோப்பு வெங்கடாச்சலம் கருதியதாக சொல்லப்படுகிறது.

இதனால் அவர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் திமுக தலைமையின் காதுகளுக்கு சென்றன. இதனால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தோப்பு வெங்கடாச்சலம் திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் அவர் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து தவெகவில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால் அவர் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். தவெகவில் இணைந்தால் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்காது, அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த ஜெயக்குமாருக்குதான் தவெக வழங்கும் என்பதால் தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவுடன் பேசி வருகிறார்.

அந்த வகையில் வரும் இடைத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பை தனக்கு கொடுக்குமாறு அதிமுகவிடம் கேட்டுள்ளாராம். இதற்கு எடப்பாடி பழனிசாமி, "நீங்கள் முதலில் கட்சியில் இணையுங்கள், பிறகு பார்க்கலாம்" என தெரிவித்துள்ளாராம். எனவே விரைவில் தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இணைவார் என சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+