"முடிச்சிடுங்க.. இதான் அசைன்மென்ட்".. அண்ணாமலைக்கு வந்த "வேலை".. திகைக்கும் திமுக, விழிக்கும் அதிமுக

அண்ணாமலையின் முதல் குறியே திமுகதான் என்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலையை எதுக்காக, மாநில தலைவர் பதவியில் பாஜக மேலிடம் உட்கார வைத்துள்ளது என்பது குறித்த தகவல்கள் லேசாக கசிந்து வருகின்றன..!

"நாம் இத்தனை வருடம் கட்சியில் இருக்கிறோம்.. பல்வேறு அதிருப்திகள், எதிர்ப்புகள், விமர்சனங்களுக்கு நடுவில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.. இப்படி திடுதிப்பென அண்ணாமலையை தலைவர் பதவியில் அமர்த்தி விட்டார்களே" என்ற உச்சக்கட்ட மனக்குமுறலில் சில தமிழக பாஜக தலைகள் உள்ளதாக தெரிகிறது..!

வானதி சீனிவாசன், சிபி ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் இப்படி அதிமூத்த சீனியர்கள் பலரும் காத்து கிடந்த பதவிதான் அது.. இதில் வானதி சீனிவாசன் பெயரும் ஓரளவு கிட்டத்தட்ட முடிவாகியும்விட்டது.

அண்ணாமலை

அண்ணாமலை

ஆனாலும் கடைசி நேரத்தில் அண்ணாமலையின் பெயரை டிக் செய்துள்ளது பாஜக தலைமை.. இதற்கு என்ன காரணம்? கர்நாடகத்தில் தான் பொறுப்பில் இருந்தபோதே ஆர்எஸ்எஸ்ஸின் முக்கிய பிரமுகர்களுடனும் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொண்டவர் அண்ணாமலை... நிறைய நெருக்கமான தொடர்புகள் பாஜகவிலும் ஏற்பட்டது. ஆனால், அண்ணாமலையின் குறி கர்நாடக மாநில அரசியல்தான்.

பாஜக

பாஜக

ஆனாலும் வலுவிழந்து போயுள்ள தமிழகத்தில், அந்த கட்சியை தூக்கி நிறுத்த வேண்டும், அதற்கு ஒருமுனைப்பான, துடிப்பான இளைஞர் தேவை என்பதால்தான், அண்ணாமலையை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது பாஜக மேலிடம் என்று ஏற்கனவே செய்திகள் வந்தன. அதனால்தான், பதவியில் சேர்ந்த உடனேயே துணைத் தலைவர் பதவியை வழங்கியது தலைமை... இதற்கும் பாஜக சீனியர்கள் மனம் புழுங்கவே செய்தனர்.

 பொருமல்

பொருமல்

இதற்கு பிறகும் சட்டமன்ற தேர்தலில் இவருக்கும் சீட்டா? என்று பொருமினார்கள்.. இதற்கெல்லாம் காரணம், பாஜக மேலிடத்தில் அண்ணாமலை அந்த நெருக்கத்தை கடைப்பிடித்துகொண்டே வந்ததுதான்.. மாநில தலைவர் முருகனாக இருந்தாலும்கூட, அண்ணாமலை டெல்லியில் நல்ல இணக்கத்தையும், தன் மீதான கவனத்தையும் தொடர்ந்து குவித்து கொண்டிருந்ததுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

 அண்ணாமலை

அண்ணாமலை

இப்போது அண்ணாமலைக்கு ஒரு அசைன்மென்ட் டெல்லி தலைமையால் தரப்பட்டுள்ளதாம்... வழக்கம்போல் திமுகவுக்கு செக் வைக்கும்படி ஒரு காரியத்தை செய்ய சொல்லி உள்ளதாக கூறப்படுகிறது.. அதன்படி திமுகவுக்கு எதிரான கேஸ்கள், அவர்கள் மீது எழும் சர்ச்சைகள், என இதை பற்றியெல்லாம் தனித்தனியாக டீடெயில்களை ரெடி செய்ய சொல்லி உள்ளதாம் டெல்லி.

ஆட்டம்

ஆட்டம்

அதுமட்டுமல்ல, அதிமுகவையும் அப்படியே ஒரு பார்வை பார்த்து கொள்ளும்படியும், அதிமுகவின் ஆட்டத்தை அடுத்த 2 வருஷத்துக்குள் அடக்கி வைத்துவிடவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளதாம்.. அதாவது ஒரு பக்கம் திமுகவுக்கு செக் வைத்து கொண்டே, இன்னொரு பக்கம் அதிமுகவையும் ஆஃப் செய்ய வேண்டும் என்பதே அந்த அசைன்மென்ட் என்கிறார்கள்.. அதுவும், நடக்க போகும் எம்பி தேர்தலுக்குள் இதையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்று பாஜக மேலிடம் தெரிவித்துள்ளதாம்.

திமுக

திமுக

0ஏற்கனவே, திமுக என்றால் அண்ணாமலை சற்று காட்டமாகிவிட்டார்.. இப்போது அசைன்மென்ட்டே தந்துள்ளதால், எந்த மாதிரியான மூவ் எடுக்க போகிறார் என தெரியவில்லை.. அதைவிட இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது... அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே, அதிமுகவுக்கு எதிராக பாஜகவால் எப்படி இப்படி எல்லாம் யோசிக்க முடியும்? இதற்கு பெயர்தான் அரசியலில் "சாணக்கியத்தனம்" என்பதோ?!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+