சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுகவுடன் இணைய நூல் விட்டு பார்க்கிறாரா தினகரன்??

அதிமுகவும், அமமுகவும் ஒன்றாக இணைய வாய்ப்பு உள்ளதா?

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக- அமமுக இணையுமோ?- வீடியோ

    சென்னை: அதிமுக - அமமுக இணைய வேண்டும் என்பதற்கு "லைட்டாக நூல்" விட்டு பார்த்துள்ளார் டிடிவி தினகரன்.

    பிரிந்தவர்கள் சேரலாம் என்று அதிமுகவும், அதிமுகவில் இணைய வாய்ப்பு என்று அமமுகவில் பலரும் சொல்லி வருகின்றனர். ஆனால் யார் வேண்டுமானாலும் வரலாம் தினகரனை தவிர என்று முதல்வரில் இருந்து தமிழக அமைச்சர்கள் வரை பலமுறை சொல்லி விட்டார்கள்.

    தங்க.தமிழ்செல்வன்கூட எங்களுடன் வரலாம் என்றும் பச்சைக்கொடி ஆளும் தரப்பில் காட்டப்பட்டுவிட்டது. ஏற்கனவே கரூர் மாவட்ட பசையை பறி கொடுத்த நிலையில் தேனி மாவட்ட வலதுகரத்தை இழக்க தினகரன் தயாராக இல்லை. ஒருவேளை தங்க.தமிழ்செல்வன் சென்றுவிட்டாலும் ஓ.ராஜா அந்த இடத்தை நிரப்புவார் என்று எதிர்பார்த்தவர் ஆசையில் மண் விழுந்துவிட்டது.

    ஓ.பி.எஸ்-தான்

    ஓ.பி.எஸ்-தான்

    அதனால் தங்க.தமிழ்செல்வனும் அதிமுகவுக்கு போய்விட்டால், கட்சியின் நிலைமை இன்னும் மோசம். ஆனால் அதிமுகவிலோ பகிரங்களை தன்னை வேண்டாம் என்று சொல்கிறார்கள். அங்கு தினகரனுக்கும், தங்க.தமிழ்செல்வனுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை ஓ.பன்னீர்செல்வம்தான்.

    ஓ.பி.எஸ்-தான்

    ஓ.பி.எஸ்-தான்

    அதனால் தங்க.தமிழ்செல்வனும் அதிமுகவுக்கு போய்விட்டால், கட்சியின் நிலைமை இன்னும் மோசம். ஆனால் அதிமுகவிலோ பகிரங்களை தன்னை வேண்டாம் என்று சொல்கிறார்கள். அங்கு தினகரனுக்கும், தங்க.தமிழ்செல்வனுக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை ஓ.பன்னீர்செல்வம்தான்.

    மாநில அரசு

    மாநில அரசு

    தங்க.தமிழ்செல்வனுக்கும் ஆதரவு கரத்தை அதிமுக விரித்துவிட்ட நிலையில், தினகரன் தன் விருப்பத்தை லேசாக வெளிப்படுத்தி உள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் என்ற மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற கூடாது என்பதை வலியுறுத்தி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "எல்லா அதிகாரங்களையும் மாநிலத்திடம் இருந்து பறித்து விழுங்க வேண்டும்! என மத்திய அரசு நினைப்பது கண்டனத்துக்குரியது" என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார்.

    திடீர் சப்போர்ட்?

    திடீர் சப்போர்ட்?

    திடீரென தினகரனுக்கு ஏன் மாநில அரசு மீது அக்கறை? பாஜக கட்டுப்பாட்டில் அதிமுக இருப்பதாக சொல்லும் இந்த 2 வருடமாக சொல்லிவிட்டு, இப்போது மட்டும் அதிமுக தரப்புக்கு ஏன் சப்போர்ட்டுக்கு இறங்க வேண்டும் என்பதுதான் யோசனையாக உள்ளது.

    வருத்தம்

    வருத்தம்

    அதேபோல, செந்தில் பாலாஜி கட்சி தாவும்போதுகூட, அதிமுகவுக்கு போயிருந்தால் கூட சந்தோஷப்பட்டிருப்பேனே, எனக்கு வருத்தம் இருந்திருக்காது, இப்படி திமுகவுக்கு போய்விட்டாரே என்று செய்தியாளர்கள் முன்னிலையிலேயே போட்டு உடைத்தார்.

    கடலூர் ஆர்ப்பாட்டம்

    கடலூர் ஆர்ப்பாட்டம்

    இதை தவிர அதிமுகவுக்கு - பாஜகவுக்கும் விரிசல் ஆரம்பித்துள்ள நிலையில், தினகரன் பாஜக அரசின் செயல்பாட்டை கண்டித்து ஜனவரி 6-ம் தேதி கடலூரில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். மிக முக்கியமாக, மக்கள் விரும்பாத எந்த திட்டமும் இனி தமிழகத்திற்கு வேண்டாம் என்பதை அதில் வலியுறுத்தி உள்ளார். அன்றைய தினத்தில் கண்டன உரையாற்ற போகும் தினகரன், அதிமுக சம்பந்தமான தன் கருத்தை சொல்லவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அடிப்படை பாசம்?

    அடிப்படை பாசம்?

    எப்படியோ அதிமுக-அமமுகவுக்கு பொதுவான எதிரியாக பாஜக விளங்கி வருவதால் இரு தரப்பும் இணையும் சாத்தியக்கூறுகள் நிறையவே எழுந்துள்ளன. அதற்கு தினகரன் அச்சாரம் போட முயற்சித்து வருவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆயிரம் சொல்லுங்க.. எடப்பாடி மேலே தினகரனுக்கு அடிப்படை பாசம் இருக்கத்தானே செய்யும்???

    English summary
    Will AMMK decide to merge with AIADMK? He is said to be trying to get involved in the AIADMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X