விஜயோடு கூட்டணி வைக்க போகும்.. முதல் கட்சி இதுதானா? கவனிச்சீங்களா? 2 கட்சிக்கும் ஒரே மாஸ்டர்மைண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ‛பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே'' என்று திடீரென்று பதிவிட்டுள்ளார். இதனால் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி வைக்க போகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த கேள்விக்கு பின் வேறு ஒரு முக்கியமான நபரும் காரணமாக இருக்கிறார். அவர்.. ஜான் ஆரோக்கியராஜ். தற்போது விஜயின் அரசியல் முடிவுகளுக்கு பின்னணியில் இருப்பது ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியராஜ் திருச்சிக்காரர். அவர் இப்போதும் பாமகவிற்கு நெருக்கம். பாமகவுடன் இவர் மிகவும் நெருக்கமாக நட்புடன் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியராஜ் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சமீபத்தில் விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. இதை எல்லாம் செதுக்கியது அவர்தான் என்று கூறப்படுகிறது.

அவருக்கு நீண்ட பயிற்சி தந்த பின்பே.. மேடை ஏறி உள்ளார். அவர் மேடையில் எப்படி செயல்பட வேண்டும்.. என்ன பேச வேண்டும்.. எப்படி நடந்து கொள்ள வேண்டும்.. மீட்டிங்கை எப்படி நடத்த வேண்டும்.. அதற்கு ஆட்கள் எப்படி நியமிக்க வேண்டும்.. பொறுப்புகளை எப்படி பிரித்து கொடுக்க வேண்டும் என்று முடிவுகள் முறையாக தீட்டப்பட்டது.

அரசியல்வாதி போல பேசாமல்.. நடிகர் போலவும் பேசாமல்.. வித்தியாசமான முறையில்.. மேடை நடுக்கம் இன்றி.. சரளமாக விஜய் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. முக்கியமாக விஜய் திராவிடம், பெரியார், மதவாதம் பற்றியெல்லாம் பேசியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அவரின் பேச்சு எப்படி இருந்ததோ இல்லையோ.. அவரின் பேச்சுக்கு பின் மிகப்பெரிய பயிற்சி இருந்தது என்பது மட்டும் உறுதி. இதை எல்லாம் செய்தது ஜான்தான்.

திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியராஜ்.. தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது ஜான் ஆரோக்கியராஜ் தான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியராஜ் தான் என்கிறார்கள். இந்த ஜான் ஆரோக்கியராஜ் தான் பாமக - தவெக இடையே கூட்டணி வைக்க காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+