தவெக அரசியலுக்கு பெரிய அடி.. நொந்து போன விஜய்.. இது நடந்திருந்தா அரசியலே மாறி இருக்குமே! என்னாச்சு?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாம். இதனால் கட்சியின் டாப் தரப்பினர்.. முக்கியமாக தலைமையே.. அதாவது விஜயே இந்த கூட்டணியால் அதிருப்தியில்தான் இருக்கிறாராம்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய போது விஜய் கூட்டணிக்கு திட்டமிடவில்லை. அவரின் திட்டம் எல்லாம் மூன்றாவது அணியாக ஒரு கூட்டணி அமைப்பது. அதாவது விசிக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணி. ஆனால் அதிமுக, திமுக உடன் கூட்டணி இல்லை என்பதே விஜயின் திட்டமாக இருந்தது. ஆனால் விஜயுடன் இணைந்த சில தலைகள்தான் அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வருகிறோம். அதிமுக வரும். அப்படி வந்தால் நாம்தான் கூட்டணி ஆட்சி. இரண்டரை வருடம் நீங்கள் முதல்வர். அல்லது துணை முதல்வர் என்றெல்லாம் ஆசை காட்டி விஜயை உள்ளே இழுத்துள்ளனர். அதாவது விஜய்க்கு கூட்டணி ஆசையை காட்டி உள்ளனர்.

விஜய்க்கு ஏமாற்றம்
ஆனால் இப்போது அந்த கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு புதிது என்பதால் அதிமுக கூட்டணி வந்த போதே அதை ஏற்காமல் மிஸ் செய்துள்ளார். அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார்.
தனித்து விடப்பட்ட விஜய்
இதனால் விஜய் கிட்டத்தட்ட தமிழக அரசியலில் ஓரம்கட்டப்பட்டு உள்ளார். முதலில் இந்த மோதல் திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணி என்ற பைபோலார் மோதலாக மாறி விட்டது. இரண்டு தரப்பிடமும் அதிகாரம்.உள்ளது டெல்லி அரசு vs மாநில அரசு. இரண்டு தரப்பிலும் பணம் உள்ளது. திமுகவிற்கு இது வாழ்வா சாவா தேர்தல். பாஜகவிற்கு இது ஈகோ யுத்தம்.
அப்படி இருக்க விஜய் சீனிலேயே இல்லை. அதிலும் விஜயிடம் உள்ளூர் தலைகள் இல்லை. பூத் கமிட்டி இல்லை. விஜயை தாண்டி வசீகரமான முகம் இல்லை. அதிலும் அவர் சினிமாவில் இன்னும் நடிக்கிறார். படம் முடிய வருட கடைசி ஆகும். இதை எல்லாம் வைத்துக்கொண்டு விஜய் அரசியலில் எதுவும் செய்ய முடியாது.
இதற்காகவே அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றார். அதிமுகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தைகளை கூட நடத்தினார். ஆனால் இப்போது அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தது தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளதாம். இதனால் கட்சியின் டாப் தரப்பினர்.. முக்கியமாக தலைமையே.. அதாவது விஜயே இந்த கூட்டணியால் அதிருப்தியில்தான் இருக்கிறாராம்.
முக்கியமாக விஜய் நேரடியாக இந்த கூட்டணியால் அப்செட் ஆகி உள்ளாராம். அரசியல் வாழ்க்கை ஆரம்பமே சூனியமாக மாறுவதை பார்த்து கொஞ்சம் விஜய் தரப்பு கடுப்பில்தான் இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications