என்ன பண்ணனும்? உதயநிதி கையில் அசைன்மெண்ட்.. ஆகா இது லிஸ்டுலேயே இல்லையே.. திமிரும் திமுக
சென்னை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி ரீதியாக சில முக்கியமான திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு களம் காண மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை மண்டல வாரியாகச் சந்திக்கத் திட்டம் உள்ளது.
முதல்கட்டமாக, தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் டெல்டா மாவட்டங்களின் 15 கழக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நாளன்று ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் இப்பாசறைக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
இக்கூட்டத்தில் பெறும் பயிற்சியைக் கொண்டு கழகத்தின் வெற்றிக்கு கண்துஞ்சாமல் கடமையாற்றிட வேண்டும். இந்தியா'வின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பி, நெருக்கடிகளை உருவாக்கிட தொடர்ச்சியான செயல் திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள்.
எத்தகைய சவால்களையும் வென்று சாதனை படைத்திடும் ஆற்றல் கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு.
'உரலுக்குள் நெல்மணிகள் உலக்கைபட்டு உமி வேறாய், அரிசி வேறாய் பிரிவது போல்' என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சங்கத்தமிழ் நூலில் கூறியுள்ளார்.
அதேபோல, அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம்.
டெல்டாவில் அதற்கான முதல் களம் அமைந்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன். 'நாற்பதும் நமதே-நாடும் நமதே, என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி ரீதியாக சில முக்கியமான திட்டங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் திமுகவின் இளைஞரணிக்கு மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்த புதிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவதற்காக, திமுகவின் மாவட்ட இளைஞரணி கூட்டத்தை இந்த வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார் திமுக இளஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.

அந்த கூட்டத்தில், பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்ட புதியவர்களுக்கு, அரசியல் தளத்தில் நாம் இயங்க வேண்டும் என்கிற வகையில்சில அட்வைஸ்களை தெரிவிக்கவிருக்கிறாராம் உதயநிதி. தவிர, 2024 நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்காக இளைஞரணியினர் எந்த அளவுக்கு உழைக்கவேண்டும் ? எப்படி வியூகம் அமைக்க வேண்டும் ? என்று உத்தரவிடுவதுடன், ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் இளைஞரணியினர் எத்தனை பேர் இருக்கின்றனர் ? என்பது குறித்தும் விசாரிக்க இருக்கிறாராம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் விரைவில் தேர்வு செய்யபடலம். அதில் இளைஞரணி நிர்வாகிகளுக்கும் முக்கிய வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளையும் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறாராம். அவர்களுக்கு அரசியல் செயல்திட்டங்கள் குறித்த அறிவுறுத்தல்களையும் செய்யவிருக்கிறாராம் உதயநிதி என்கிறார்கள் இளைஞரணி திமுகவினர்.
இது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு திமுக இளைஞரணி செயலாளர்களுக்கு முக்கிய அசைன்மெண்டுகளை உதயநிதி கொடுக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
-
“இனி அறுவடை தான்.. தோழமைக் கட்சியினருடன் இணைந்து வேலை செய்யுங்க”.. ஸ்டாலின் கொடுத்த மெசேஜ்! -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications