புதிய வரி விதிப்பு முறை பெஸ்ட்டா? அதிக பலன் உடையதா? மத்திய பட்ஜெட் சொல்வது என்ன?.. இதை படிங்க!
சென்னை: புதிய வருமான வரி பிரிவில் பல்வேறு மாற்றங்களை செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதிய வருமான வரி விதிப்பு முறையில் அதிரடி சலுகைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
ஆனால் பழைய வருமான வரி விதிப்பு முறையில் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் பழைய வருமன வரி பிரிவை பயன்படுத்தும் ஊழியர்கள் புதிய வருமான வரி பிரிவிற்கு வர வேண்டும் என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லி இருக்கிறது.
இந்த மாற்றத்தை புரிந்து கொள்ளும் முன் தற்போது இருக்கும் வருமான வரி விதிப்பு முறைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு முறைகள்
தற்போது வருமான வரி விதிப்பில் இரண்டு முறைகள் உள்ளன. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை மக்கள் தேர்வு செய்ய முடியும். முதல் முறை - பழைய வரி விதிப்பு (old regime) முறை.
இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை.
2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும்.
5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும்.

பழைய வரி விதிப்பு முறை
இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். இதில் 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் இந்த முறையும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆம் இந்த விதிப்பு முறையைத்தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் வரி அதிகம் என்றாலும் 80C, 80D போன்ற சலுகைகள் இருந்தன. இதனால் இதில் நிறைய விலக்குகளை எளிதாக பெறலாம். இப்போது வரி விதிப்பில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் புதிய வரி விதிப்பில் (new regime ) மட்டும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய வரி விதிப்பு
பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இப்போது இந்த புதிய வரி விதிப்பு முறையில்தான் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால்
உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் .
300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் .
600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும்
900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும்
1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும்
15 லட்சத்திற்கு மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் .

விளக்கம்
புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது. ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும். புதிய வருமான வரி விதிப்பு முறையில் பல அதிரடி சலுகைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது போல தோன்றினாலும் இதில் விலக்குகள் எதுவும் கிடையாது. அதே சமயம் பழைய வருமான வரி விதிப்பு முறையில் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன் மூலம் பழைய வருமன வரி பிரிவை பயன்படுத்தும் ஊழியர்கள் புதிய வருமான வரி பிரிவிற்கு வர வேண்டும் என்று மத்திய அரசு சொல்லாமல் சொல்லி இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications