எம்பி தேர்தலில் களமிறங்கும் வடிவேலு? திமுக போடும் புதிய கணக்கு.. அப்படியா? லிஸ்டுலேயே இல்லையே
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் வடிவேலு களமிறக்கப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக சார்பாக இவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நடிகர் வடிவேல், இணைய உலகில் கடந்த 15 வருடங்களாக இவர்தான் சூப்பர் ஸ்டார். படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் வடிவேல் இல்லாத இன்டர்நெட் தமிழகத்தில் கிடையாது. மீம் உலகில் இப்போதும் வடிவேல்தான் காமெடி கிங். நேசமணி தொடங்கி வண்டுமுருகன் வரை வடிவேலின் கதாபாத்திரங்கள்தான் இப்போதும் தமிழக காமெடி உலகை ஆண்டு வருகிறது.

வடிவேல் அரசியல் சொதப்பல்; 2011ல் வடிவேல் தமிழக சினிமா உலகில் டாப்பில் இருந்தார். அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட் அடித்தது. ஒரு படம் விடாமல் எல்லா படங்களுக்கும் வடிவேல் காமெடி பெரிய வரவேற்பை பெற்றது., வடிவேலுக்காக மட்டும் ஹிட் ஆன பல மொக்கை படங்கள் இருக்கிறது. வடிவேல் காமெடி, பல இடங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. அப்படிப்பட்ட நேரத்தில் வடிவேல் எடுத்த தவறான முடிவுதான் அரசியல் தேர்தல் பிரச்சாரம்.
2011 சட்டசபை தேர்தலில் திமுகவின் ஸ்டார் பேச்சாளராக வடிவேல் களமிறங்கி இருந்தார். ஈழ பிரச்சனை, 2ஜி பிரச்சனை என்று திமுக மீது கடுமையான விமர்சனங்கள் இருந்த நேரம் அது. அதிமுக - தேமுதிக எதிர் தரப்பில் வலிமையான கூட்டணியும் வைத்து இருந்தது. அப்போதைய தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடனான சண்டை காரணமாக, தேமுதிகவை எதிர்த்து திமுகவிற்கு தீவிரமாக பிரச்சாரம் செய்தார் வடிவேல்.
அரசியல் பிரச்சாரம்: பொதுக்கூட்டங்களில் மக்கள் வெள்ளம் அலைமோதியது. விஜயகாந்த்தை மட்டும் கிண்டல் செய்த வடிவேல், கவனமாக அதிமுகவை தவிர்த்து வந்தார். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தபின்,
வடிவேல் மார்க்கெட் மொத்தமாக சிக்கலுக்கு உள்ளானது. வடிவேலை வைத்து படம் எடுத்தால் , அது வெளியாகுமா என்ற நிலை உருவானது. அவரின் அரசியல் பிரச்சாரம் சினிமா வாழ்க்கையில் பெரிய சிக்கலை கொண்டு வந்தது.
மொத்தமாக வடிவேலுக்கு படங்கள் வருவது குறைந்து போனது. சினிமாவில் இருந்து விலகியவர் அப்படியே தன்னை அரசியலில் இருந்தும் தூரமாக வைத்துக் கொண்டார். பெரிதாக இரண்டிலும் ஆர்வம் காட்டவில்லை. அதன்பின் வடிவேல் ஹீரோவாக நடித்த சில படங்களும், மெர்சல் போல காமெடியனாக நடித்த சில படங்களும் வெளியானது. ஆனால் இதெல்லாம் வடிவேலுக்கு பெரிய பிரேக் கொடுக்கவில்லை.
மாமன்னன் வடிவேலு: இந்த நிலையில் இத்தனை நாட்கள் அரசியல் குறித்து பேசாமல் இருந்த வடிவேல் மீண்டும் அரசியல் குறித்து பேச தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் மாமன்னன் படத்தில் அமைச்சர் உதயநிதி உடன் நடித்தார். அதன்பின் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் வடிவேலு களமிறக்கப்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக சார்பாக இவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எம்பி தேர்தலில் நிற்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. சினிமாவில் பெரிதாக நடிக்காத நிலையில் அவர் அரசியலுக்கு திமுக மூலமாக வரும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பாக திமுக தரப்பில் சில பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும்.. வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்தால் சர்ப்ரைஸ் ஆக வேண்டாம் என்றும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications