திமுகவிற்கு தாவும் வானதி சீனிவாசன்? காயத்ரி சொன்ன 3 பரபர பாயிண்ட்ஸ்! அண்ணாமலையா? இப்படி சொல்றாங்களே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் திமுகவில் இணைய போவதாக போடப்பட்ட போஸ்ட் ஒன்றிற்கு காயத்ரி ரகுராம் பதில் அளித்துள்ளார்.

பாஜகவில் தற்போது உட்கட்சி மோதல் உச்சம் தொட்டுள்ளது. சீனியர்களுக்கும் புதிதாக அண்ணாமலை தலைமைக்கு கீழ் பாஜகவில் இருக்கும் இளம் தலைவர்களுக்கும் இடையில் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி சரமாரி புகார்களை வைத்து வருகிறார். கட்சியில் சீனியர்களை அண்ணாமலை மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மதிக்கவே இல்லை என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி தெரிவித்து வருகிறார்.

பாஜக சஸ்பெண்ட்

பாஜக சஸ்பெண்ட்

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் கூட காயத்ரி தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். கட்சிக்குள் மோனோபோலி இருப்பதாக.. அதாவது ஒரே ஒரு தலைவர் மட்டும் கட்சியில் அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புவதாக காயத்ரி புகார் வைத்து வருகிறார். சமீபத்தில் கூட அண்ணாமலை - ரபேல் வாட்ச் விவகாரத்தில் காயத்ரி கருத்து தெரிவித்து இருந்தார். அண்ணாமலை பற்றி பொய்யான செய்தி பரவினால் உங்களுக்கு அது வலிக்கிறது. அதுவே அண்ணாமலை என்னை பற்றி பொய் சொன்னால், துபாய் ஹோட்டலில் இருந்ததாக பொய் சொன்னால், 150 பேருக்கு முன் என்னுடைய கேரக்டரை அவமானப்படுத்தினால் உங்களுக்கு பிரச்சனை இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி இருந்தார்.

 என்ன சொல்கிறார்

என்ன சொல்கிறார்

முக்கியமாக சீனியர்களுக்கும் - ஜூனியர்களுக்கும் இடையில் மோதல் நிலவி வருகிறது. பாஜகவில் சீனியர்களை வார் ரூம் வைத்து அண்ணாமலை ஆட்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்து இருந்தார். சீனியர்களை பாஜகவில் மதிக்கவில்லை. தமிழக பாஜகவில் இருக்கும் சிலர் சீனியர்களுக்கு எதிராக டிரெண்டிங் செய்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக ஒரு வார் ரூமே இயங்கிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கு எதிராக லைக் போட்டு செய்கின்றனர் என்று காயத்ரி சமீபத்தில் கூட பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று கூறி இவரை பாஜக தலைவர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்தார்.

கோவை

கோவை

சமீபத்தில் கோவை சிலிண்டர் கார் வெடிப்பு சம்பவத்தில் கூட வானதி சீனிவாசன் போராட்டம் செய்வோம் என்று சொல்ல.. அண்ணாமலை அதெல்லாம் செய்ய மாட்டோம் என்று கோர்ட்டில் மறுத்ததும் பெரிய சர்ச்சை ஆனது. இந்த நிலையில்தான் அண்ணாமலைக்கும் வானதிக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு இடையில் இன்று சவுக்கு சங்கர் ட்விட்டரில் போட்ட போஸ்டில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளது. தன்னை கட்சியில் தொடர்ந்து ஓரம்கட்டுவதாக அவர் கருதி வருகிறார்.

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் அவருக்கும் இடையிலான உறவு கசப்படைந்துவிட்டது. அவரின் கணவர் சு. சீனிவாசன், விஎச் பி அமைப்பின் வடக்கு தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டார். 15 வருடமாக இந்த பதவியில் இருந்த அவர் நீக்கப்பட்டுவிட்டார். வானதியை திமுகவில் இழுக்க செந்தில் பாலாஜிதான் பேசி வருகிறார். தனக்கு பாஜகவில் எதிர்காலம் இல்லை என்று அவர் நினைக்கிறார். ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கூறி வானதியை அவர்கள் அழைப்பதாக, குறிப்பிட்டு இருந்தார்.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

இதை காயத்ரி ரகுராம் பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பகிரும் பொய்யான செய்திகள் இவை. பாஜகவில் இருந்து மேலும் ஒரு சீனியரை நீக்க இவர்கள் பரப்பும் வதந்திகள் இவை. தேசிய கட்சியில் இருந்து வெளியேற யார் விரும்புவார்கள். எங்களைத்தான் துரத்தி அடிக்கிறார்கள்.

1. அவர் தேசிய மகளிரணி தலைவர்.
2. அவர் தேர்தல் கமிட்டியில் இருக்கிறார்.
3.பாஜகவின் கொங்கு எம்எல்ஏ அவர்.

அவரை கட்சியில் இருந்து துரத்த இதைவிட வேறு காரணம் வேண்டுமா? அவரையும் தற்போது திமுக ஆளாக காட்ட பார்க்கிறார்கள். எல்லாம் பழைய ஸ்ட்ராட்டஜி, நேற்று காயத்திரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+