மோடியை பார்த்துவிட்டு வந்ததும்! விஜயை பற்றி நயினார் சொன்ன விஷயம்! அதிமுக - பாஜக - தவெக கூட்டணி ரெடி?
சென்னை: பாஜக - அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக - பாஜக அமைத்துள்ள கூட்டணியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை கொண்டு வருவதற்கான தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.
சமீபத்தில் எடப்பாடி - பாஜக நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதில், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும்.

விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி கேட்க, பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது விஜய் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என நயினார் பகிர்ந்திருக்கிறார்'.. அதோடு விஜய்க்கு 50 தொகுதிகளுக்கு மேல் தரப்படாது.
கூட்டணி பேச்சுவார்த்தை
ஏனென்றால் அதிமுகேவே 120+ இடங்களில் கண்டிப்பாக போட்டியிடும். அதோடு இரண்டரை வருடங்கள் எல்லாம் கண்டிப்பாக முதல்வர் பதவி கிடைக்காது. வேண்டுமென்றால் துணை முதல்வர் பதவி கிடைக்கும்.. ஆனால் அதுவும் சந்தேகம்தான்.. அமைச்சரவையில் வாய்ப்பும் சந்தேகம்தான்.. இந்த சந்திப்புகளை தொடர்ந்தே 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாக இருக்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். இதற்கான பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறாராம்.
அதாவது 180க்கும் அதிகமான இடங்களில் தனித்து போட்டியிட எடப்பாடி திட்டமிட்டு உள்ளாராம், என்பது போன்ற விஷயங்கள் விஜயுடன் பேசப்பட உள்ளதாம். என்று அதிமுக-பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது., முக்கியமாக யாருக்கு எங்கே போட்டியிட வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் வரை டைம்
அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணைவது பற்றி ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும். உதாரணமாக ஆகஸ்ட் இறுதிக்குள் கூட்டணி உறுதியானால்.. அதற்கு ஏற்றபடி களப்பணிகளை செய்ய வேண்டி இருக்கும். அதாவது யாருக்கு எங்கே போட்டியிட வாய்ப்பு உள்ளது, உளவுத்துறை சர்வே.. அடிப்படையான கூட்டணி கொள்கைகள் என்பதை வகுக்க முடியும். பிரச்சனைகளை களைய முடியும். ஆகஸ்டில் இருந்து 9 மாதத்தில் சட்டசபை தேர்தல் என்பதால்.. அதற்குள் முடிவு எடுக்க வேண்டும். அதுவே ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால்.. விஜய் இல்லாமல் கூட்டணி என்ன செய்ய வேண்டும் என்று அதிமுக - பாஜக தரப்பு முடிவுகளை எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். அதில், தவெக நடிகர் விஜய் கூட்டணிக்கு அழைப்பு என பேச்சுவார்த்தை எனக்கு தெரியவில்லை.. இந்த அரசல் புரசல்கள் பற்றி எனக்கு தெரியவில்லை, நேற்று நான் மோடி மற்றும் அமைச்சர் அவர்களை சந்தித்தேன்,
இன்று உங்களை சந்திக்கிறேன் நாளை கோட்டையில் சந்திப்போம் . காஞ்சி காமாட்சி அம்மன் தரிசனம் செய்து வந்தவுடன் சொல்கிறேன் திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும், என்று நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications