விஜய் வருகிறார்? குறிக்கப்பட்ட நாள்! அதிமுக-பாஜக கூட்டணியில் ஐக்கியமாகும் தவெக? டீல் போடும் புள்ளி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக - பாஜக அமைத்துள்ள கூட்டணியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை கொண்டு வருவதற்கான தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறதாம். ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி செய்துள்ளார். சமீபத்தில் கூட சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம்.

2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி
பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி சில சீக்ரெட் மீட்டிங்குகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளார்.

சொதப்பிய தமிழக வெற்றிக்கழகம்

இதன் மூலம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மொத்தமாக தனித்துவிடப்பட்ட உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு புதிது என்பதால் அதிமுக கூட்டணி வந்த போதே அதை ஏற்காமல் மிஸ் செய்துள்ளார். அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது.

Is Vijay coming to AIADMK-BJP alliance Delhi fixes date for the alliance formation

தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பி பேசி இருக்கிறதாம். இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கூட்டணி சேரவில்லை.

தனித்து விடப்பட்ட விஜய்

இதனால் விஜய் தனித்து விடப்படும் நிலை ஏற்படலாம். அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்துள்ளதால் அந்த வாக்குகள் அப்படியே அவர்களுக்கு போகும். பாமக, தேமுதிகவும் இவர்கள் பக்கமே போக வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணி வாக்குகள் ஒரு பக்கம் அப்படியே இருக்கும். சீமான் தனது பங்கிற்கு 8% வாக்குகளை எடுத்துக்கொள்வார். இளைஞர்கள் சிலரின் வாக்குகளை தவிர விஜய்க்கு பெரிய அளவில் வாக்குகள் போகாத நிலை ஏற்படலாம். அதிமுக - பாஜக கூட்டணி உருவானால் அவர்களின் கூட்டணி பலமாகும். இது அதிக வாக்குகளை எடுக்க விரும்பும் விஜய்க்கு பெரிய சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

எடப்பாடி நயினார் ஆலோசனை

கூட்டணியை இழுக்க ஆலோசனை. அதிமுக - பாஜக அமைத்துள்ள கூட்டணியில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை கொண்டு வருவதற்கான தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது

சமீபத்தில் எடப்பாடி - பாஜக நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதில், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும்.

விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி கேட்க, பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சி கள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது விஜய் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என நயினார் பகிர்ந்திருக்கிறார்'.. அதோடு விஜய்க்கு 50 தொகுதிகளுக்கு மேல் தரப்படாது. ஏனென்றால் அதிமுகேவே 120+ இடங்களில் கண்டிப்பாக போட்டியிடும். அதோடு இரண்டரை வருடங்கள் எல்லாம் கண்டிப்பாக முதல்வர் பதவி கிடைக்காது. வேண்டுமென்றால் துணை முதல்வர் பதவி கிடைக்கும்.. ஆனால் அதுவும் சந்தேகம்தான்.. அமைச்சரவையில் வாய்ப்பும் சந்தேகம்தான்.. இந்த சந்திப்புகளை தொடர்ந்தே 2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாக இருக்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறாராம். இதற்கான பல்வேறு ஆலோசனைகளை, திட்டங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறாராம்.

Take a Poll

அதாவது 180க்கும் அதிகமான இடங்களில் தனித்து போட்டியிட எடப்பாடி திட்டமிட்டு உள்ளாராம், என்பது போன்ற விஷயங்கள் விஜயுடன் பேசப்பட உள்ளதாம். என்று அதிமுக-பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் தேதி

ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும். உதாரணமாக ஆகஸ்ட் இறுதிக்குள் கூட்டணி உறுதியானால்.. அதற்கு ஏற்றபடி களப்பணிகளை செய்ய வேண்டி இருக்கும்.

அதாவது யாருக்கு எங்கே போட்டியிட வாய்ப்பு உள்ளது, உளவுத்துறை சர்வே.. அடிப்படையான கூட்டணி கொள்கைகள் என்பதை வகுக்க முடியும். பிரச்சனைகளை களைய முடியும். ஆகஸ்டில் இருந்து 9 மாதத்தில் சட்டசபை தேர்தல் என்பதால்.. அதற்குள் முடிவு எடுக்க வேண்டும். அதுவே ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால்.. விஜய் இல்லாமல் கூட்டணி என்ன செய்ய வேண்டும் என்று அதிமுக - பாஜக தரப்பு முடிவுகளை எடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+