இது அதுல்ல.. ஜெகன் மோகனின் அதே ஸ்டைலை பின்பற்றும் விஜய்? காரணம் அந்த "மாஸ்டர்மைண்ட்" ஆலோசகர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் நேற்று முதல்நாள் கட்சி சார்பாக பொதுக்கூட்டத்தை நடத்தினார். இந்த முதல் பொதுக்கூட்டத்தில் அவரின் பேச்சு செயல்பாடு கவனம் பெற்றது.

அரசியல்வாதி போல பேசாமல்.. நடிகர் போலவும் பேசாமல்.. வித்தியாசமான முறையில்.. மேடை நடுக்கம் இன்றி.. சரளமாக விஜய் பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றது. முக்கியமாக விஜய் திராவிடம், பெரியார், மதவாதம் பற்றியெல்லாம் பேசியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அவரின் பேச்சு எப்படி இருந்ததோ இல்லையோ.. அவரின் பேச்சுக்கு பின் மிகப்பெரிய பயிற்சி இருந்தது என்பது மட்டும் உறுதி.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இந்த மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன. விஜய் நேற்று அறிவித்த கொள்கைகள் சரி என்பவர்கள் இருக்கலாம்.. அதை ஏற்காதவர்கள் கூட இருக்கலாம். ஆனால் அவர் நேற்று பேசிய விஷயங்கள் டிரெண்டானது.. தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆதரித்தோ.. எதிர்த்தோ இந்த மாநாடு பற்றி பலர் பேச அந்த மாநாடு டிரெண்டானது. நேற்று விஜய் இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷயங்களும் பெரிய அளவில் கவனம் பெற்றன.

விஜய் அரசியல்: விஜயின் பேச்சு.. அவரின் வெள்ளை சட்டை, பிரவுன் பேண்ட் ஆகியவற்றை பார்த்தவர்களுக்கு இது எங்கேயோ பார்த்த ஸ்டைல் போல இருக்கிறதே என்று தோன்றலாம். அது வேறு யாருமல்ல.. ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஸ்டைலைத்தான் விஜய் பின்பற்றுகிறார் என்ற வாதம் வைக்கப்பட்டு வருகிறது.

2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது.


அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். அந்த நிறுவனத்தில் அப்போது திட்டங்களை வகுத்தது ஜான் ஆரோக்கியசாமிதான். இப்போது விஜய்க்கு பின்னணியில் இருக்கும் நபரும் ஜான் ஆரோக்கியசாமி என்ற மாஸ்டர்மைண்ட்தான். தமிழக அரசியலில் மீண்டும்.. நீண்ட நாட்களுக்கு பின் ஆக்டிவ் ஆகி இருக்கும் அரசியல் ஆலோசகர்தான் ஜான் ஆரோக்கியசாமி. திருச்சியை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி ஏற்கனவே பாமகவிற்கு தேர்தல் பணிகளை செய்துள்ளார்.


விஜயின் ஸ்டைல், பேச்சு.. நடை எல்லாம் அப்படியே ஜெகன் மோகன் ஸ்டைலில் இருக்க காரணம்.. ஜான் ஆரோக்கியசாமிதான். ஜான் ஆரோக்கியசாமி பாமகவின் பிரபலமான.. மாற்றம் முன்னேற்றம் அன்புமணி பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பாமக அந்த தேர்தலில் சறுக்கினாலும்.. ஜான் ஆரோக்கியசாமி முன்னெடுத்த அந்த பிரச்சாரம் இப்போதும் பிரபலம். வெளிநாடுகளில் பல நிறுவனங்களில் வேலை பார்த்த ஜான் ஆரோக்கியசாமி திருச்சிக்காரர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு பின் ஆலோசகராக இருப்பது ஜான் ஆரோக்கியசாமிதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றமாக பாமகவை அப்போது கொண்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி அதை பெரிய அளவில் டிரெண்ட் செய்தார். வடக்கிலும் கூட இவர் தேர்தல் பணிகளை செய்துள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை செய்த ஜான் ஆரோக்கியசாமி.. தேசியவாத காங்கிரஸ் அங்கே கடந்த தேர்தலில் அதிக இடங்களை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

தற்போது ஜான் ஆரோக்கியசாமிதான் விஜய்க்கு பின் இருக்கும் அந்த மாஸ்டர்மைண்ட். கட்சி பணிகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்தாலும்.. வியூக வகுப்புகளை கவனிப்பது என்னவோ ஜான் ஆரோக்கியசாமிதான் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+