80 தொகுதிகளில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு! திருச்சியில் தவெக டாப்? போட்டுடைத்த ரகசிய சர்வே! நிஜம் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் அரசியல் பலரையும் உற்று கவனிக்க வைத்துள்ளது.. தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்க வாய்ப்புள்ளது? எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும்? என்ற உறுதிப்படுத்தப்படாத கணிப்புகளும் இணையத்தில் வலம் வருகின்றன.. அந்தவகையில் 80 இடங்களில் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இது சாத்தியமா? இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் சொல்வதென்ன?

விஜய்க்கான செல்வாக்கு தமிழகத்தில் அதிகமாக இருந்தாலும், அதன் விகிதாச்சாரம் தெரியவில்லை.. எனவே தவெக தரப்பிலேயே ரகசிய சர்வேக்கள் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

Vijay TVK Trichy

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில், விஜய்க்கு 40 சதவீதம் மக்களிடம் ஆதரவு இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாம்.

80 தொகுதிகள்

அந்த சர்வேயின்படி, வரக்கூடிய தேர்தலில் எந்த கூட்டணிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது, தவெகவுக்கு 80 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பு கிடைக்கலாம், சோழிங்கநல்லூர், திருவள்ளூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 50 சதவீதத்துக்கு வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது, இதில் 60 சதவீதத்துக்கு பெண்களின் வாக்குகளே கை கொடுக்கும்.

ஒருவேளை கரூர் சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இந்த ஓட்டு விதிகங்கள் வேற லெவலில் இருந்திருக்கும், எப்படியும் விஜய்க்கு 80 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்று சர்வே ரிப்போர்ட் கூறுகிறதாம்..

திருச்சி டாப்

அதேபோல மற்றொரு தவெகவின் ரகசிய சர்வேயில், திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, திருவாடானை இந்த 3 தொகுதிகளில் தவெக மிகப்பெரிய அளவுக்கு வெற்றி பெறும் என்று ரிப்போர்ட் வந்துள்ளதாம்..

இதில் திருச்சியில்தான் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளதாகவும், சிறுபான்மையினர், இளைஞர்கள் அதிகமாக உள்ளதால், எப்படியும் 60 சதவீத வாக்குகளை எளிதாக திருச்சியில் பெற்றுவிடக்கூடும், அதிலும் விஜய் திருச்சியில் களமிறங்கினால் அதன் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கக்கூடும் என்றெல்லாம் அந்த ரகசிய சர்வே கூறுகிறதாம்.

தேசிய மாநில கட்சியுடன் கூட்டணி

இதுபோன்ற சர்வேக்கள் தவெகவினரை குஷிப்படுத்தி வருவதாக தெரிகிறது.. தவெகவினர் சிலர் இதுகுறித்து கூறும்போது, "செங்கோட்டையன் போன்ற சீனியர்களின் வருகையும், வழிநடத்துதலும் துவெகவுக்கு வேறு முகத்தை தந்துகிறது.. பிரச்சாரத்துக்கு முன்பே 80 தொகுதிகள் என்றால், பிரச்சாரத்தை துவங்கினால் இந்த எண்ணிக்கை மாறும்..

எந்த பெரிய கட்சியுடனும் கூட்டணி அமைக்காமலேயே தவெகவின் வளர்ச்சி இப்படி உள்ளது பிரம்மிக்கத்தக்கதாக உள்ளபோது, இன்னும் வலுவான தேசிய அல்லது மாநில கட்சியுடன் கூட்டணி அமைந்தால், அதன் தாக்கம் வேறு மாதிரியாக இருக்கும். விஜய்யின் செல்வாக்கு, பெண்கள், இளைஞர்களின் ஆதரவு, திமுக எதிர்ப்பு, போன்றவையே தவெகவுக்கு பலமாக உள்ளது:" என்று பூரித்து சொல்கிறார்கள் தவெகவினர்.

கம்பி கட்டுற கதை

ஆனால், ரகசிய சர்வேக்களில் வெளிவந்துள்ளபடி உண்மையிலேயே விஜய்க்கு 80 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு சாத்தியமா? என்ற சந்தேகம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது..

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சொல்லும்போது, விஜய்க்கு 80 தொகுதிகள் என்பதற்கு வாய்ப்பே கிடையாது.. ஓரளவு ஆட்டத்தை கலைப்பார்.. வாக்குகளை சிதைப்பார், மிகப் பெரிய அளவில் திமுக மற்றும் அதிமுக வாக்குகளை, குறிப்பாக திமுக வாக்குகளை விஜய் சிதைப்பார்...

1 சீட்டை ஜெயிக்க வேண்டுமானாலும் அது கடினமான பணி என்பதை விவரமறிந்தவர்கள் அறிவார்கள்.. விஜய் வந்தால் வெற்றி பெற்றுவிடுவார், இத்தனை சீட்டுகளில் வென்றுவிடுவார் என்றெல்லாம் கணிப்புகளை சொல்வோர் அதுகுறித்த ஆதாரத்தை வெளியிட வேண்டும்.. அல்லது பெரிய நிறுவனம் அந்த சர்வேயை பகிரங்கப்படுத்த வேண்டும்.. மற்றபடி இதுபோன்ற ரகசிய சர்வேக்கள் எல்லாம் கம்பி கட்டும் கதையாகவே பார்க்கப்படும்" என்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+