விஜய் நடிக்கும் “வாரிசு” பிரென்ச் திரைப்படத்தின் காப்பியா? சந்தேகத்தை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் "வாரிசு" திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், அது பிரென்சு திரைப்படத்தின் காப்பியா என பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்விட்டரில் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

விஜய் 66

விஜய் 66

இவர்களை தவிர்த்து பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் இதில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. தமன் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. குடும்ப கதையை களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியானது.

ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்

ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர்

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் படத்தின் பெயர் "வாரிசு" என்று வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் தி பாஸ் என்று குறிப்பிட்டதைபோல், தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் 2023 பொங்கல் அன்று படம் வெளியாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 ட்விட்டரில் டிரெண்ட்

ட்விட்டரில் டிரெண்ட்

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து விஜய் ரசிகள் இணையதளத்தில் அதனை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் #HBDDearThalapathyVijay என்ற ஹேஷ்டேக் முதலிடத்திலும், The Boss Returns என்பது 2 வது இடத்திலும் உள்ளன.

ப்ளூ சட்டை மாறன்

ப்ளூ சட்டை மாறன்

இந்த நிலையில், பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், 2008 ஆம் ஆண்டு வெளியான பிரென்சு திரைப்படமான லார்கோ வின்சை வாரிசுடன் ஒப்பிட்டு இருக்கிறார். "சக்திவாய்ந்த கோடீஸ்வரர் கொல்லப்பட்டவுடன் அவரால் ரகசியமாக தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மகன், தனது சட்டப்பூர்வமாக உரிமையை நிரூபிக்க தனது தந்தையின் கொலையாளிகளை கண்டுபிடித்து, அவரது தொழில் சாம்ராஜ்ஜியத்தை அபகரிக்க விடாமல் தடுப்பதுதான் கதை. வாரிசு இதன் அதிகாரப்பூர்வ ரீமேக் படமா? அல்லது தழுவலா அல்லது காப்பியா?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+