முஸ்லிம்களை மோசமாக காட்டி படம் எடுத்தவர்தானே விஜயகாந்த்.. அரசியல் பொறுப்பற்றவர்! பரபர விமர்சனம்
சென்னை: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஒரு அரசியல் தலைவராக சிறப்பாக செயல்பட்டது கிடையாது, சமூக பொறுப்புடன் செயல்பட்டது கிடையாது என்ற விமர்சன பார்வையுடன் ஒரு பதிவு வைரலாக சுற்றி வருகிறது.
யூசுப் ரியாஸ் என்பவர் இந்த பதிவை, சமூக வலைத்தள பக்கங்களில் ஒன்றான, "எக்ஸ்" தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். அதில் பலரும் திமுக அனுதாபிகளாகவும் உள்ளனர். அந்த பதிவில் அவர் என்ன கூறியிருக்கிறார், என்ற முழு பதிவு இதோ அவரது வார்த்தைகளில்.

"Aloor Sha Navas நிருபரா இருக்கும் போது விஜயகாந்த்திடம் இஸ்லாமியர்களை
ஏன்? தீவிரவாதிகளா காட்டி படம் எடுக்கிரீங்களேன்னு கேட்டு இருக்கார், எல்லா நியூஸ் பேப்பர்ல அப்படித்தான வருதுன்னு அதி அற்புதமான பதிலை அளித்தவர் விஜய காந்த்..
இதை ஷாநவாஸ் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.
மகன் சினிமா ஷூட்டிங்கிற்காக வெளிநாடுல தங்கி ரெண்டு மாசம் கழிச்சு வந்தவர் கிட்ட, நிருபர்கள் தமிழ்நாட்டின் முக்கியமான பிரச்னையை பற்றி கேள்வி எழுப்பிய போது நான் ரெண்டு மாசமா எந்த நியூஸ் பேப்பரும் படிக்கலன்னு நழுவி சென்றார், இத்தனைக்கும்
அப்போது எதிர் கட்சி தலைவர் வேறு. 2011 ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற பிறகு ஜெ. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவாரா? என்ற கேள்விக்கு எனக்கென்ன ஜோசியமா தெரியும்ன்னு பதிலளித்தார்.. விஜயகாந்த்.
தமிழ் நாட்டுக்கு சரித்திர நன்மை, பழம் நழுவி பாலில் விழாமல் போனது (2016ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது விஜயகாந்த் கட்சி திமுகவோடு கூட்டணி அமைக்கும் என்று நம்பி, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி கூறிய வார்த்தை- பழம் நழுவி பாலில் விழும் என்று காத்திருக்கிறேன் என்பது. ஆனால் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணியை தேர்ந்தெடுத்து திமுகவை புறக்கணித்தார். அந்த தேர்தலில் ஒரு சீட் கூட தேமுதிக வெல்லவில்லை).
அதிமுகவிற்க்காக ரெண்டாவது முறையாக (ஜெயலலிதாவுக்காக) போட்ட ஓட்டை வைத்து,
பன்னீர் செல்வமும், பழனிசாமியும் தமிழகத்தை சீரழித்ததை விட, விஜயகாந்த், பிரேமலதா என்னும் நபர்கள் அதிகாரத்துக்கு வந்து இருந்தால், அதிகமாகவே தமிழகம் நாசமாகவே
போய் இருக்க கூடும் என நினைக்கிறோம். ம.ந.கூ வழியா நடந்து இருந்தால் இன்னும் பல மடங்கு damage ஆயிருக்கும் தமிழகம்.
சினிமா துறையில் உணவு எல்லாருக்கும் சமமா இருக்கணும்னு சில விசயங்களை செய்து இருக்கிறார். சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தை திறம்பட நடத்தினார். மலேசியா சிங்கப்பூரில் ஸ்டார் நைட் நிகழ்ச்சி நடத்தி காட்டினார். இது போன்ற சினிமா துறையில் நடந்த நல்லவகளை எல்லாம் பொது சமூகத்துக்கு நடந்ததாக புல்லரிக்க பேசுவது அரசியல் அரை வேக்காடு தனமானது.. வானத்தை போல படத்துக்கு 24 மணி நேரம் தொடர்ந்து நடித்து கொடுத்ததில் விக்ரமன் வேண்டுமானால் சில்லறை சிதற விடலாம் தவிர நமக்கென்ன அதில் லாபம் ஒன்றுமில்லை.

இது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற ஆளுமைகளால் வார்த்தெடுக்கப்பட்ட சமூகம் என்பதால் சற்று தளராத நிலையில் இருக்கிறது. தமிழகத்தில் தாமரை மலர விடாமல் தடுப்பதில் மட்டுமல்ல விஜய், ரஜினிகாந்த் போன்றவர்களையும் அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதிலும் திராவிட பற்றாளர்களுக்கு பங்குண்டு. முதுமை, உடல் உபாதை காரணங்களுக்காக நாம் ரசித்த நடிகர் அவதிப்படுவதுக்கு மட்டுமே நமது அனுதாபங்களை தவிர வேறென்றுமில்லை. இவ்வாறு அந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது.
அதேநேரம், விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு போகவில்லை என்பதற்காக இவ்வாறு இந்த பதிவு திட்டுகிறார் என்றும், விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டினாரே தவிர இந்தியாவிலுள்ள இஸ்லாமியர்களை தப்பாக காட்டியதில்லை என்றும் பின்னூட்டங்கள் வந்துள்ளன. அதேநேரம், அரசியல் விஷயத்தில், இவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்ற பின்னூட்டங்களையும் பார்க்க முடிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications