விஜய் பக்கம் சாயும் 2 கம்யூனிஸ்ட்கள்? கூடுதலாக வரும் 4 எம்எல்ஏக்கள்! நாளை தவெகவிற்கு முக்கிய நாள்
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநில செயலாளர்களை சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து தான் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் வேண்டும். இதனால் 10 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுதவிர இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது. இதற்கு 2 கம்யூனிஸ்ட், விசிகவிடம் உள்ள தலா 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 6 எம்எல்ஏக்களின் ஆதரவை தவெக கோரி வருகிறது. இந்த 3 கட்சிகளிடம் ஆதரவு கோரி விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
அதுமட்டுமின்றி திருமாவளவனிடம், விஜய் செல்போனில் பேசி ஆதரவு கோரினார். அதுமட்டுமின்றி தவெகவின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இன்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோரினார். இவர்கள் 3 பேரும் தற்போது வரை தவெகவிற்கு ஆதரவு கொடுக்கவில்லை.
இந்நிலையில் தான் நாளை கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தவெகவிற்கு ஆதரவு கொடுப்பது பற்றி விவாதிக்க முடிவு செய்துள்ளன. அதேபோல் திருமாவளவனின் விசிகவும் நாளை தான் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி விஜய்க்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பதை முடிவெடுக்க உள்ளன. இதனால் நாளைய தினம் தான் தவகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளது.
இதற்கிடையே தான் இன்று காலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். அப்போது அவர்களிடம் ஸ்டாலின் திமுக கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தவெக பக்கம் சாய்ந்த நிலையில் ஸ்டாலின் இந்த கோரிக்கையை 3 தலைவர்களிடம் வைத்துள்ளார். இதனால் நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மட்டுமின்றி விசிக சார்பில் நடக்கும் ஆலோசனை கூட்டம் தவெகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மீட்டிங்காக பார்க்கப்படுகிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்!












Click it and Unblock the Notifications