Paytm இனி பயன்படுத்த முடியாதா? ரிசர்வ் வங்கி உத்தரவால் புது குழப்பம்! மக்களே இதை கவனிங்க
சென்னை: பேடிஎம் பேமண்டண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்திருக்கிறது. இந்த அறிவிப்பால், இனி பேடிஎம் பயன்படுத்தி பணம் செலுத்த முடியாதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
பெட்டி கடைகள் தொடங்கி ஷாப்பிங் மால் வரை பண பரிவர்த்தனையில் பேடிஎம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இப்படி இருக்கையில், திடீரென இதற்கான லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டிருப்பதால், இனி இதை பயன்படுத்த முடியாதோ என மக்கள் குழப்பமடைந்திருக்கிறார்கள். உண்மை என்ன? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Paytm ஆப் வேலை செய்யுமா?
ஆம், நிச்சயம் வேலை செய்யும். Paytm என்பது ஒரு செயலி. அது பல வங்கிகளுடன் (SBI, HDFC, Axis, YES Bank) இணைந்து தனது UPI சேவைகளை வழங்குகிறது. எனவே, நீங்கள் உங்கள் மற்ற வங்கி கணக்குகளை Paytm-உடன் இணைத்து வைத்திருந்தால், எப்போதும் போல ஸ்கேன் செய்து பணம் அனுப்பவோ, பெறவோ முடியும். ஆனால், சிலருக்கு இது வேலை செய்யாது.
யாருக்கெல்லாம் பிரச்சனை?
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால், Paytm Payments Bank என்ற பெயரில் நீங்கள் வைத்திருக்கும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும். உங்களிடம் Paytm Payments Bank அக்கவுண்ட் இருந்தால், அதில் இனி பணத்தைப் போட முடியாது.
Paytm Wallet மற்றும் FASTag: உங்கள் வாலட் அல்லது ஃபாஸ்டேக் 'Paytm Payments Bank'-ஆல் வழங்கப்பட்டிருந்தால், அதில் இனி ரீசார்ஜ் செய்ய முடியாது. ஆனால், அதில் ஏற்கனவே இருக்கும் பணத்தை நீங்கள் காலியாகும் வரை பயன்படுத்தலாம்.
Paytm அக்கவுண்ட் பணம் என்ன ஆகும்?
இனி Paytm Payments Bankல் பணம் போட முடியாது எனில், ஏற்கெனவே அதில் நாம் போட்டு வைத்திருக்கும் பணம் என்ன ஆகும்? என்கிற கேள்வி எழலாம். இதற்கு ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. அதாவது, வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருப்பித் தர வங்கியிடம் போதிய நிதி உள்ளது. எனவே, உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை என ரிசர்வ் வங்கி தெளிவுப்படுத்தியிருக்கிறது.
என்ன செய்ய வேண்டும்?
சுருக்கமாக சொல்வதெனில், நீங்கள் Paytm செயலியில் UPI மூலம் (Google Pay போல) மற்ற வங்கி கணக்குகளைப் பயன்படுத்திப் பணம் செலுத்தினால், உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் வழக்கம் போல் அதைப் பயன்படுத்தலாம். Paytm Payments Bank கணக்கு அல்லது வாலட் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications