செல்போன் சார்ஜ் சீக்கிரம் காலியாகுதா? ஃபுல் சார்ஜ் போடுறீங்களா? இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க
சென்னை: சென்னை: நமது செல்போனில் எப்போதும் சீக்கிரமே சார்ஜ் இறங்கிவிடுகிறதோ என பலரும் நினைப்பதுண்டு. பேட்டரி வீக் ஆவதே செல்போன் சார்ஜ் பிரச்சினைக்கு முக்கிய காரணம் என்றாலும், அந்த பேட்டரி எதனால் வீக் ஆகின்றது? பேட்டரி வீக் ஆகாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? நாம் எப்படி சார்ஜிங் செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
செல்போன்கள் என்பது மனிதர்கள் இடையே தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஒவ்வொருவருக்கும் ஆறாம் விரலைப் போல செல்போன்கள் தற்போது மாறிவிட்டன என்று சொல்லும் அளவிற்கு, எப்போதும் செல்போனும் கையுமாக பலரும் இருப்பதை பார்க்க முடிகிறது.

சீக்கிரமாகவே சார்ஜ் காலியாகிறதா
வெறும் தொலைபேசி அழைப்புகள் மட்டும் அல்லாமல், டிக்கெட் புக்கிங், ஷாப்பிங், உணவு ஆர்டர், திரைப்படங்கள், கேம்கள், டிஜிட்டல் பேங்கிங் என கிட்டத்தட்ட எல்லா சேவைகளையும் செல்போன் வாயிலாக தற்போது முடிக்கும் அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எப்போதும் செல்போனும் கையுடன் இருப்பவர்களுக்கு பெரிய சிக்கல் என்னவென்றால் சீக்கிரமாகவே சார்ஜ் தீர்ந்துவிடுகிறது என்பதுதான்.
மற்றவர்களின் செல்போன்களுடன் ஒப்பிடும் போது, நமது செல்போனில் சீக்கிரமே சார்ஜ் இறங்கிவிடுகிறதோ என சில நினைப்புகளை கூட பார்க்க முடிகிறது. பேட்டரி வீக் ஆவதே செல்போன் சார்ஜ் பிரச்சினைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. பேட்டரி வீக் ஆவதற்கு அது சார்ஜிங் எப்படி செய்கிறோம் என்பது உள்ளிட்ட சில காரணங்கள் உள்ளன.
இரவு முழுக்க சார்ஜ் செய்யலாமா?
செல்போனை இரவு முழுக்க சார்ஜ் செய்யலாமா? எத்தனை சதவீதம் சார்ஜ் போட வேண்டும் என்பது பற்றி அதற் சார்ந்த நிபுணர்கள் சொல்லும் தகவலை பார்க்கலாம்.
செல்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்யும் வழக்கத்தை சிலர் பின்பற்றுவதை பார்க்கிறார்கள். சிலர் 100% சார்ஜ் ஆன பிறகும் இரவு முழுவதும் செல்போன் சார்ஜ் கனெக்ஷனில்தான் இருக்கும். அப்படி சார்ஜ் செய்வது நல்லதல்ல. நீண்ட நேரம் தொடர்ந்து சார்ஜ் நிலையிலேயே வைத்திருப்பது படிப்படையாக பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடும்.
80% மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்
ஏனெனில், பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆன பிறகும் சார்ஜ் நிலையிலேயே நீடிப்பது, பேட்டரிக்குள் வெப்பத்தையும் அழுத்தத்தையும் உருவாக்கும். அது படிப்படையாக பேட்டரியின் செயல்திறனை குறைத்துவிடும்.
அதனால்தான் பல செல்போன் நிறுவனங்கள் 80% மட்டுமே சார்ஜ் செய்வதற்கு பரிந்துரைக்கின்றன. அதே சமயத்தில், 20% சதவீதத்துக்கு குறைவான நிலையில் செல்போனில் சார்ஜ் இருக்க லதல்ல. எப்போதும் செல்போனில் சார்ஜ் அளவு 20% முதல் 80% சதவீதத்துக்குள் இருப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பேட்டரி குறைந்த அழுத்தத்திலேயே வைக்கப்பட்டிருக்கும். சார்ஜ் சுழற்சியும் மெதுவாக நடந்து முடியும். இதன் விளைவாக பேட்டரிக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்தவும்
சில செல்போன் நிறுவனங்கள் 80% முதல் 90% சதவீதம் வரையிலான சார்ஜ் வரைதக்க நிர்ணயத்தை நிறுத்துவதற்காக வசதியையும் வழங்கியிருக்கின்றன. பேட்டரி செட்டிங்ஸில் இதற்கான வசதி உள்ளது. இப்படி குறிப்பிட்ட அளவிற்கு சார்ஜை மேனேஜ் செய்வது நீண்ட காலத்திற்கு பேட்டரியின் செயல்திறனை உறுதி செய்வதையும், அடிக்கடி பேட்டரி மாற்றுவதற்கான தேவையை குறைப்பதையும் நோக்கமாக்கிறது.
அதேபோல சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் செல்போன் மாடலுக்கு உகந்த, ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்தவும். வெப்பமான பகுதியில் இருந்தால் சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். செல்போன் அதிகம் வெப்பமடைந்தாலும் சார்ஜ் செய்வதை நிறுத்த வேண்டும். இதுபோன்ற சில அடிப்படை விஷயங்களை செய்தாலே செல்போன் பேட்டரிகளின் ஆயுளை நீட்டிக்க முடியும் என்கிறார்கள்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications