இசக்கி சுப்பையா, எடப்பாடி பழனிசாமி, விஜய்.. இவங்களாலேயே ஸ்டாலினுக்கு பிளஸ்! பேக் ஃபயர் ஆவது இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசக்கி சுப்பையா போல், மீண்டும் ஒரு அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தாலும், அவரையும் விஜய் விலைக்கு வாங்கிவிடுவார், அதற்கு எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும் வழக்கம்போல வேடிக்கைதான் பார்ப்பார்கள் என்கிற எண்ணம் வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி சட்டப் போராட்டம் நடத்தி தக்கவைக்கத் தவறிய அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் அனைத்தும் இயல்பாகவே திமுகவுக்கே இது சாதகமாக மாறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் திராவிடர் வெற்றிக்கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பஷீர்.

பிரபல சேனல் ஒன்றில் பேட்டி தந்துள்ள வல்லம் பஷீர், "தேர்தலில் வெற்றி பெற்ற வெறும் 25 நாட்களிலேயே சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். வாக்களித்த மக்களின் விரலில் வைக்கப்பட்ட மை ஈரம் காய்வதற்கு முன்பே, தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் மிகப்பெரிய குதிரை பேரம் நடந்துள்ளது...

Isakki Subbaiah Stalin EPS Vijay DMK AIADMK

அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகரிடம் அளித்த தகுதி நீக்கப் புகாரின் பேரில் நடவடிக்கை வந்துவிடும் என்ற அச்சத்தில்தான், அவசர அவசரமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு இசக்கி சுப்பையா, விஜயபாஸ்கர், சத்தியபாமா மற்றும் மரகத குமரவேல் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். ஜெயலலிதா வழக்கைப்போலவே, முடிவு அறிவிக்கப்படாத ஒரு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீண்டும் வேட்பாளர்களாகக் களமிறங்குவது திமுகவுக்கு மிகப்பெரிய அரசியல் சாதகத்தையே தரும்.

இசக்கி சுப்பையா

காஞ்சிபுரம் மாவட்டத்தின் எஃகுக் கோட்டையைக் கட்டிக்காத்த தாமு அன்பரசன் மதுராந்தகம் தொகுதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது கட்சிக்கு மிகப்பெரிய பலம். அதேபோல, சட்டமன்றத்தில் அரசின் தவறுகளையும் மிசா குறித்த கருத்துகளையும் தைரியமாக எதிர்த்து பேசிய பரந்தாமன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக சுலபமாக ஜெயித்துவிடும், படுத்துட்டே ஜெயித்துவிடும் என்றெல்லாம் அலட்சியமாக இருக்க முடியாது... ஆளுங்கட்சியின் கையில் இருக்கும்போது கடுமையான போட்டி இருக்கும் என்பதை உணர்ந்து திமுக களமிறங்கியுள்ளது.

ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்குமா?

ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் ஜெயிக்கும் என்ற வழக்கமான விதியை உடைத்த பல்வேறு முன்னுதாரணங்கள் தமிழக அரசியலில் உள்ளன. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது நடந்த திருப்போரூர் இடைத்தேர்தலிலும், தஞ்சாவூர் இடைத்தேர்தலிலும் திமுகதான் வெற்றி பெற்றது... அதேபோல எம்ஜிஆர் காலத்தில் நடைபெற்ற புகழ்மிக்க மாயவரம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை மீறி கோசி மணி தலைமையில் திமுக வென்றது. அதனால் இடைத்தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கும் வாய்ப்பளிப்பார்கள்.

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது. எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் சரியான புரிதலின்றி பதிலளிப்பதையும் மக்கள் கவனிக்கிறார்கள்.

நடுநிலை வாக்காளர்கள் கடந்த தேர்தலில் விஜய் மீது இருந்த ஈர்ப்பால் வாக்களித்தனர். ஆனால், கடந்த 100 நாட்களில் டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வாங்குவது தவறில்லை என அமைச்சர் பேசுவது, கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முடியாதது என தவெக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் அம்பலமாகியுள்ளன.

அதிமுகவின் இரட்டை சின்னம்

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு, தங்களுடைய பதவியை விற்று ராஜினாமா செய்திருக்கிறார்கள்.. சபாநாயகரிடம் ஏற்கனவே தகுதி நீக்கப் புகார் நிலுவையில் இருக்கும் சூழலில், அவர்கள் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு 4 நாட்கள் ஆகியும் எடப்பாடி பழனிசாமி அதைத் தடுத்து நிறுத்த கோர்ட்டுக்கு போகாமல், எந்தவொரு சட்டப் போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை.

சபாநாயகரிடம் கொடுத்த புகாரின் மீது மீண்டும் அழுத்தம் கொடுக்காமல் அமைதி காக்கும் எடப்பாடி பழனிசாமியிடம், கட்சிக்கு இவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்ட பிறகும் இருக்க வேண்டிய நியாயமான கோபமோ அல்லது கொந்தளிப்போ இல்லையே.

அதிமுகவின் இந்தச் செயலற்ற தன்மையும் மௌனமும் தொண்டர்களிடையே பெரும் வருத்தத்தையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. கட்சியை இந்த நிலைக்குக் கொண்டுவந்து சீரழித்ததே சி.வி. சண்முகம் போன்றவர்களை ஏவிவிட்ட விஜய்தான் என்கிற கோபம் அதிமுக தொண்டர்களிடம் நிலவுகிறது.

எடப்பாடி பழனிசாமி

மீண்டும் ஒரு அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தாலும், அவரையும் விஜய் விலைக்கு வாங்கிவிடுவார், அதற்கு எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவும் வழக்கம்போல வேடிக்கைதான் பார்ப்பார்கள் என்கிற எண்ணம் வாக்காளர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி சட்டப் போராட்டம் நடத்தித் தக்கவைக்கத் தவறிய அதிமுகவின் அதிருப்தி வாக்குகள் அனைத்தும் இயல்பாகவே திமுகவுக்கே இது சாதகமாக மாறும்..

அதேபோல தவெக கூட்டணியில் உள்ள ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பெரிய அளவிலான வாக்கு வங்கியோ கட்டமைப்போ இல்லை. ஆனால், எங்கள் கட்சியின் ஊராட்சித் தலைவர்கள் மற்றும் கட்டமைப்பு மூலம் கணிசமான வாக்குகள் திமுக கூட்டணிக்குக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், தவெக ஆட்சியில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் அவர்களின் வாக்குகள் இயல்பாகவே திமுகவுக்குத் திரும்பும்.

திமுகவின் வெற்றி வாய்ப்பு

இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஜெயிக்க வைத்த மக்கள், மீண்டும் வந்து விசிறி சின்னத்தில் வாக்களிக்கக் கேட்பதை ஏற்க மாட்டார்கள். இந்த அதிருப்தி வாக்குகளை அதிமுக தலைமை சட்டப் போராட்டம் நடத்தித் தக்கவைக்கத் தவறிவிட்டது. வெற்றி பெற்ற வேட்பாளரை மீண்டும் விஜய் விலைக்கு வாங்கிவிடுவார் என்ற எண்ணம் அதிமுக தொண்டர்களுக்கே வந்துவிட்டது. ஆனால், திமுக வேட்பாளர் பரந்தாமனை விலைக்கு வாங்க முடியாது என்பதால் மக்கள் திமுக மீது நம்பிக்கை வைப்பார்கள்.

மின்சார கட்டண உயர்வு, லாக்கப் மரணங்கள், பாலியல் தொல்லைகள், மகளிர்க்கான உரிமைத் தொகை தாமதம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யாதது போன்ற பொய் வாக்குறுதிகளைப் பிரச்சாரத்தில் மக்கள்முன் கொண்டு சென்று திமுக இந்த இடைத்தேர்தலில் உறுதியாக வெற்றி பெறும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+