இரக்கம் காட்டாத இஸ்ரேல்..லெபனானின் இரு தலைகளை கட்டம் கட்டி தூக்கிய மெஸாட்! உச்சகட்ட பரபரப்பில் ஈரான்
டெஹ்ரான்: ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் மேற்கு ஆசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு மேலும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிராக தாக்குதலை தொடங்கின. அந்தத் தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது. மேலும், ஈரான் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சரை உட்பட 40க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
இந்தச் சம்பவம் மேற்கு ஆசிய அரசியல் சூழ்நிலையை பெரிதும் பாதித்தது. இதற்கு பதிலடியாக ஈரான் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. அதே சமயம், ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் தாக்குதல்
இதனால் இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் நிலை உருவானது. இந்நிலையில்,இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் மற்றும் லெபனான் நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகளை ஒரே நேரத்தில் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் பல இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பின் உள்கட்டமைப்புகளை துல்லியமாக குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் மோதல்
ஹிஸ்புல்லாவும், ஈரான் ஆட்சியாளர்களும் இஸ்ரேலை தாக்க முடிவு செய்ததற்கான விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் சூழலில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டு உச்சகட்ட எச்சரிக்கை நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், லெபனானில் நடந்த தாக்குதலில் பாலஸ்தீன் இஸ்லாம் ஜிகாத் (Palestinian Islamic Jihad) அமைப்பின் தளபதி அபு ஹம்சா ரமி (Abu Hamza Rami) கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இஸ்ரேல் பாதுகாப்புப் படை மற்றும் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தாக்குதல்களை ஒருங்கிணைத்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா தலைவர் கொலை
சிரியா-லெபனான் எல்லைப் பகுதியில் அந்த அமைப்பின் உறுப்பினர்களின் நகர்வுகளையும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தவர் அபு ஹம்சா ராமி என கூறப்பட்டுள்ளது. அவரை நீக்கியதன் மூலம், அந்த அமைப்பின் இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாடுகள் கணிசமாக பலவீனமடைந்துள்ளதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அதேபோல், மற்றொரு துல்லியத் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் புலனாய்வு தலைமையகத் தலைவர் ஹுசைன் மெஹ்லட் (Hussein Mahlet) கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த அமைப்பிற்கு பெரிய பின்னடைவு என கூறப்படுகிறது.
இஸ்ரேல்
லெபனானின் தைரே நகரில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை சேமித்து வைத்திருந்த இடங்களும் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஹிஸ்புல்லா மற்றும் ஈரானிய ஆட்சியுடன் தொடர்புடைய பல கட்டளை மையங்களும் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பல முனைகளில் இருந்து தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை எந்தவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களுக்கு எதிரான எந்த தாக்குதலாக இருந்தாலும் அதற்கு பதிலடி வழங்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய பதற்றம்
ஈரான், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையேயான இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. இரு தரப்பினரும் தங்களது ராணுவ நடவடிக்கைகளை குறைக்காமல் முன்னெடுத்து வருவதால், நிலைமை மேலும் தீவிரமடையும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. தற்போது, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ராணுவம் தயார்நிலை உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications