விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்... ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது..!

இன்று மாலை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுனை முடித்து கொண்டு திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கடந்த மாதம் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி 49, ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீன ரக புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்நிலையில், பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட சி.எம்.எஸ்.01 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்து உள்ளது. இந்த தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த உதவும் சி.எம்.எஸ்-01 என்ற செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் மூலம் டிசம்பர் 17ம் தேதி அதாவது இன்றைய தினம் விண்ணில் ஏவ உள்ளதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.

ISRO Begins Countdown For Launch of Communication Satellite PSLVC50

அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் இன்று மாலை வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவப்பட்டது.

பி.எஸ்.எல்.வி. சி-50 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது. இதில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு இருக்கின்றன.. இது இந்தியாவின் 52-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இதற்கான இறுதிக்கட்ட பணியான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று பகல் 2.41 மணிக்கு தொடங்கியது.

அதனால், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். 25 மணிநேர கவுண்ட் டவுனை முடித்துக்கொண்டு திட்டமிட்டபடி இன்று மாலை 3.41 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேரலையில் ராக்கெட் செலுத்தப்படுவதை காணலாம். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்நிகழ்வை நேரடியாக காண அனுமதியில்லை.

ISRO Begins Countdown For Launch of Communication Satellite PSLVC50

கல்வி, மருத்துவம், பேரிடர் மேலாண்மை, சி-பாண்டு ஆகிய பணிகளுக்குத் தேவையான தரவுகளை பெறுவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. மேலும், இந்த செயற்கைக்கோளில் உள்ள சி-பேண்ட் அலைக்கற்றைகளானது, இணைய சேவை மற்றும் செல்போன் சேவைகளை மேம்படுத்த உதவும்.
அதுமட்டுமல்ல, இந்திய நிலப்பரப்பு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவையை இந்த செயற்கைக்கோள் மேம்படுத்த உதவும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+