நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான்-2.. 30 நிமிடம் ரொம்ப டென்ஷனாகிவிட்டோம்.. இஸ்ரோ தலைவர் சிவன்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Chandrayaan 2 | நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது சந்திரயான்-2- வீடியோ

    சென்னை: சந்திரயான் -2 புவி சுற்று வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுப் பாதையில் சேர்ந்தது டென்ஷனான 30 நிமிட நடவடிக்கை என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் தெரிவித்தார்.

    இன்று காலை 9.30 மணியளவில், நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான் -2 விண்கலம் செலுத்தப்பட்டது. இதன்பிறகு காலை 11.30 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் சிவன் அப்போது அவர் கூறியதாவது:

    ISRO Chief K Sivan says The insertion of Chandrayaan-2, into the lunar orbit was a tense

    இது டென்ஷனான 30 நிமிட ஆபரேஷன். கடிகாரம் துடித்தது போலவே, டென்ஷனும், பதட்டமும் எங்களுக்கு கூடிக்கொண்டே இருந்தது. சந்திரயான் -2, நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டபோது, பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் அளித்தது.

    நிலவை 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் சந்திரயான் - 2 சுற்றி வருகிறது. நிலவை சந்திரயான் சுற்றி வரும் வேகம் படிப்படியாக குறைக்கப்படும்.

    நாங்கள் மீண்டும் சந்திரனை சந்திக்க உள்ளோம். அடுத்த பெரிய நிகழ்வு செப்டம்பர் 2 ஆம் தேதி நடக்க உள்ளது. அப்போது, விண்கலத்திலிருந்து, லேண்டர் சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்படும். செப்டம்பர் 3 ஆம் தேதி, லேண்டரின் அமைப்புகள் இயல்பாக இயங்குவதை உறுதிசெய்ய சுமார் 3 வினாடிகள் ஒரு சிறிய ஆபரேஷன் செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்தியாவின் முதல் சந்திரன் ஆய்வு சந்திரயான் -1 மூலம், 2008 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது 2வது மிஷன் ஆகும். இன்று நிலவின் சுற்றுப் பாதையில், சந்திரயான்-2 நுழைந்தபோது, இஸ்ரோ ஆய்வு மையத்தில் சுமார் 200 விஞ்ஞானிகள், மற்றும் அதிகாரிகள் கூடியிருந்தனர். வெற்றிகரமாக இந்த பணி நிறைவு பெற்றதுமே, ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி இந்த சாதனையை வரவேற்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+