ஆதித்யா எல் 1 விண்ணில் பாய்ந்த நாளன்று! இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு கண்டறியப்பட்ட புற்றுநோய்!
சென்னை: ஆதித்யா எல் 1 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்திற்கு புற்றுநோய் கண்டறியப்பட்ட நிலையில் தொடர் மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அவர் மீண்டு வந்துள்ளார்.
கேரளத்தை சேர்ந்த சோம்நாத் இஸ்ரோவின் இரு முக்கிய மைல்ஸ்டோன்களான சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 ஆகிய திட்டங்களின் போது இஸ்ரோ தலைவராக இருந்து மற்ற விஞ்ஞானிகளுக்கு வழிகாட்டியுாக இருந்தார்.

சந்திரயான் 3 என்பது நிலவின் தென் பகுதிக்கு அனுப்பப்பட்ட மாபெரும் திட்டமாகும். நிலவின் தென் பகுதிக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அது போல் நிலவில் கால் பதித்த 4ஆவது நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் வானிலை மாற்றங்கள் தொடர்பான செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பிய நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில் சந்திரயான் 3 செயற்கைகோள் செலுத்தப்பட்ட போது உடலில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. எனது வயிற்றில் கட்டி போல் இருந்த நிலையில் அதை மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர்.
இதையடுத்து ஸ்கேன் முடிவுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி வந்தன. அப்போது எனக்கு குடல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அந்த தினத்தில்தான் ஆதித்யா எல் 1 என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஒரு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
புற்றுநோய் என முடிவுகள் வந்த போது எனக்கு பேரிடியாகத்தான் இருந்தது. அதைவிட என் குடும்பத்தினர் என்னுடன் பணியாற்றுவோருக்கும் பெரும் இடியாக இந்த தகவல் இருந்தது. ஆனால் நான் எந்த வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் இந்தியாவின் விண்வெளி துறைக்கு வளர்ச்சிக்கு வித்திடும் ஆதித்யா எல் 1 இல் கவனம் செலுத்தினேன்.

இதையடுத்து எனக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு ஒரு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து 4 நாட்கள் மருத்துவமனையில் இருந்த நான் 5ஆவது நாள் பழையபடி புது தெம்புடன் ஓடியாடி வேலை செய்ய தொடங்கிவிட்டேன்.
தொடர் மருத்துவ சிகிச்சைத்தான் தீர்வு. 5ஆம் நாள் முதல் வலியே இல்லை. இவ்வாறு சோம்நாத் தெரிவித்திருந்தார். சோம்நாத்திற்கு புற்றுநோயால் அத்தனை வலி இருந்த போதிலும் எத்தனை அர்ப்பணிப்புடன் ஆதித்யா எல் 1 திட்டம் விண்ணுக்கு செலுத்திய போது இருந்திருந்தார் என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். எது எப்படியோ புற்றுநோய் வந்தாலே வாழ்க்கையே இருண்டு விட்டதாக கருதுவோர் மத்தியில் இன்று நான் குணமாகிவிட்டேன், தொடர் சிகிச்சைதான் காரணம் என சோம்நாத் கூறுவது புற்றுநோய் என்றில்லை எந்த நோய்க்கும் அது நம்பிக்கையூட்டும் மருந்தாகவே இருக்கும். இதுநாள் வரை சோம்நாத்திற்கு புற்றுநோய் பாதிப்பு என்ற தகவல் வெளியே தெரியாத நிலையில் இன்று தானே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
-
27 ஆண்டுகளுக்கு பிறகு.. இன்று ப்ளூ மைக்ரோ மூன்! மிஸ் பண்ணாதீங்க மக்களே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications