“புதையல்” நிலாவிலே.. வளைகுடாபோல் எரிபொருள்! இந்தியா கண்டுபிடித்த அமெரிக்காவாமே -பூரிக்கும் மயில்சாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலவின் தென் துருவத்தில் எரிபொருளும், நீரும் அதிகளவில் இருப்பதாகவும், இந்தியா கண்டுபிடித்த அடுத்த அமெரிக்காதான் நிலா என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்து இருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு நிலவுக்கு ஏவப்பட்டு அதில் நீர் இருப்பதற்கான சுவடுகள் இருப்பதை கண்டுபிடித்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கல திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. இவர் சந்திரயான் 3 திட்டம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.

ISRO former scientist Mayilsamy Annadurai said that Lot of fuel and water in Moon

அப்போது பேசிய அவர், "பூமியில் குறைந்து வரும் எரிபொருளுக்கு மாற்று சக்தி நிலவில் உள்ளது. இனி நிலாதான் வளைகுடா நாடுகளாகவும், அமெரிக்காவாகவும் இருக்கும். வளைகுடா நாடுகளுக்கு நாம் ஏன் செல்கிறோம். நிலவில் வெப்ப நிலையில் 50 டிகிரி இருந்து நாம் ஏன் அங்கு செல்கிறோம் என்றால், இங்கு உள்ளதை விட அங்கு அதிக ஊதியம் கொடுக்கிறார்கள் என்பதால்தான்.

ஏன், அங்கு அதிக ஊதியம் கொடுக்கிறார்கள்? அங்கு எண்ணெய் வளம் உள்ளது. எண்ணெய் வளத்தை எடுப்பதற்காக வழங்குகிறார்கள். அங்கு நீரே இல்லை. இருப்பினும் எவ்வளவோ தூரத்தில் கடல் இருந்தாலும், அந்த நீரை கொண்டு வந்து பெரிய நகரங்களை உருவாக்குகிறார்கள். எல்லாவற்றுக்கும் மூலக் காரணம் மற்ற இடங்களில் இல்லாத அளவுக்கு அங்கு உள்ள எண்ணெய் வளம்.

மனித சமுதாயம் தன்னுடைய நாகரீகத்தை தொடங்கியது நீரை ஒட்டிதான். இப்போது இந்த இரண்டையும் சேர்த்து நான் பார்க்கிறேன். நிலவில் தென் துருவம் என்பது இரண்டும் சேர்ந்த ஒன்று. நிலவில் மற்ற இடங்களில் உள்ளதை விட நீர் அதிகம் உள்ள இடம் துருவ பகுதி. இப்போதுள்ள எண்ணெய் வளம் குறையும்போது நமக்கு ஒரு வளம் தேவை.

அந்த வளம் இருக்கும் இடம் நிலவு. அருகில் நீரும் உள்ளது. இரண்டும் சேரும்போது நிலவின் தென் துருவத்தை அடுத்த ஒரு அமெரிக்க கண்டமாக நான் பார்க்கிறேன். இந்தியாவுக்காக மாற்றுவழி கண்டுபிடிக்க மேற்கு நோக்கி சென்ற கொலம்பஸ் தவறுதலாக கண்டுபிடித்த நாடுதான் அமெரிக்கா. அந்த அமெரிக்கா கண்டுபிடிக்க தவறிய நிலவில் நீரை கண்டுபிடித்தது இந்தியா.

இந்த இரண்டையும் சேர்த்து பார்த்தோம் என்றால் இந்தியா நிலவில் கண்டுபிடித்தது அடுத்த அமெரிக்கா. இது இரண்டையும் சேர்த்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது எப்படி அமெரிக்காவை நோக்கி உலகில் உள்ள எல்லோரும், ஐரோப்பியர்களாக இருக்கலாம், ஆசிய கண்டத்தினராக இருக்கலாம், ஆஸ்திரேலியர்களாக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் எப்படி போகிறார்களோ, அதுமாதிரி இப்போது எல்லா விஞ்ஞானிகளும் நிலவை நோக்கி போய்கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+