ககன்யான் வீரர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! உயிரை காக்கும் EOS-8 சாட்டிலைட்! சம்பவம் செய்யும் இஸ்ரோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் இந்தியா சொந்தமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இருக்கிறது. இந்நிலையில், அவர்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக செயற்கைக்கோளை நாளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது என்பது உலக சாதனைதான். ஆனால் அதைவிட முக்கியமாக, இது சாமானிய மக்களுக்கும் அறிவியல் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும். காலங்காலமாக விண்வெளி பயணங்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் விண்வெளி பயணங்களை மேற்கொள்ளும்போது இந்தியாவில் அது பேசுபொருளாக மாறுகிறது.

ISRO Space

இப்படி இருக்கையில், சொந்த முயற்சியாக இஸ்ரோ சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து 4 வீரர்கள் விண்வெளிக்கு பறப்பார்கள் என்று இஸ்ரோ கூறியிருக்கிறது.

கடைசி பயணம்: ஏற்கெனவே இந்தியாவை சேர்ந்தவர்கள் விண்வெளிக்கு பயணித்திருக்கிறார்கள். கடந்த 1982ம் ஆண்டு ரஷ்யா சல்யூட் 7 எனும் விண்வெளி நிலையத்தை ஏவியிருந்தது. அதற்கு மூன்றாம் தர நாடுகளிலிருந்து விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டார். அப்படியாக இந்தியாவிலிருந்து விமானப்படையின் போர் விமானி ராகேஷ் சர்மா 1984ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்யாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இன்றுவரை இந்தியா சார்பில் விண்வெளிக்கு பறந்த ஒரே இந்தியர் இவர்தான்.

எதிர்பார்ப்பு: கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் வி்ண்வெளிக்கு பறந்திருந்தாலும் அவர்கள் இந்திய வம்சாவளியினராகவும், அமெரிக்காவுக்காக விண்வெளிக்கு பறந்தவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். இப்படி இருக்கையில் ராகேஷ் சர்மாவுக்கு அடுத்து இந்தியாவுக்காக விண்வெளியில் இந்தியர் 4 பேர் பறக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த பயணத்தின்போது விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், பிரத்யேக செயற்கைகோளை நாளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது. நாளை காலை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்வெளிக்கு SSLV ராக்கெட்டை இஸ்ரோ ஏவுகிறது. இதற்கு முன்னர் இரண்டு முறை இந்த ராக்கெட்கள் ஏவப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு முறை தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இரண்டாவது முறை மட்டுமே மிஷன் வெற்றியடைந்திருக்கிறது.

அந்த வகையில் SSLVக்கு இது மூன்றாவது பயணமாகும். இருப்பினும் இந்த முறை தோல்வி ஏற்படாமல் இருக்க 21 புதிய தொழில்நுட்பங்களை ராக்கெட்டில் இஸ்ரோ கொண்டு வந்திருக்கிறது.

இந்த ராக்கெட் சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் எஸ்ஆர்-0 டெமோ சாட்-ஐயும், 175 கிலோ எடையுள்ள ஈஓஎஸ்-8 செயற்கைக்கோளையும் விண்ணுக்கு கொண்டு செல்கிறது. இதில் ஈஓஎஸ்-8 செயற்கைக்கோளின் பணிகள் மிகவும் முக்கியமானதாகும்.

அதாவது, இந்த செயற்கைகோளில் புற ஊதாக்கதிர்களை அளவிட்டு ஆய்வு செய்யும் கருவி இருக்கிறது. விண்வெளியில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகம். எனவே, இது விண்வெளிக்கு செல்லும் ககன்யான் வீரர்களின் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட கூடாது. எனவேதான் முன்னெச்சரிக்கையாக இந்த செயற்கைகோளை இஸ்ரோ அனுப்புகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+