சக்ஸஸ்.. சக்ஸஸ்.. 2வது முறை வெற்றிகரமாக உயர்த்தப்பட்ட ஆதித்யா எல்1 வட்டப்பாதை.. இஸ்ரோ மாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விண்ணில் பாய்ந்தது ஆதித்யா L1. சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா L1 விண்கலம் பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது .ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது, என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சூரியனின் L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . சோலார் கொரோனா என்பதுதான் சூரியனின் வெளிப்புற பகுதி ஆகும். இதைத்தான் ஆதித்யா எல் 1 ஆய்வு செய்ய உள்ளது. அதேபோல் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளது. சந்திரயான் 3ன் லேண்டர், ரோவர் நிலவில் இறங்கியது போல ஆதித்யா எல்1 சூரியனில் இறங்காது. சூரியனை இது தொடாது. மாறாக சூரியனை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து சுற்றி வரும். அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல என்ற திருக்குறள் போல.. சூரியனை அகலாமல்.. அணுகாமல் தூரத்தில் இருந்து தீ காய்வது போல ஆதித்யா எல் 1 சுற்றி வரும்.

ISROs Aditya-L1 solar: The mission performs 2nd earth-bound maneuver

எங்கே இருக்கும்?: இந்த ஆதித்யா சூரியனில் இருந்து எல் 1 பாயிண்ட் தூரத்தில் இருக்கும்.எல் 1 என்பது Sun-Earth Lagrange point ஆகும். அதாவது சூரியனுக்கும் - பூமிக்கும் இடையில் உள்ள பாயிண்ட் ஆகும். பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இந்த புள்ளி உள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் பொருட்டு ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இரண்டின் ஈர்ப்பு விசை காரணமாக ஆதித்யா எல் 1 எளிதாக இங்கே வட்டப்பாதையில் சுற்ற முடியும்.

கிட்டத்தட்ட சூரியன் பூமிக்கு இடையிலான தூரம் 151 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். கிட்டத்தட்ட சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்படும்.
கிட்டத்தட்ட 4 மாதங்கள் பயணம் செய்து ஆதித்யா எல் 1 சூரியனின் இந்த எல் 1 பாயிண்டை சென்றடையும்.

எப்படி செல்லும்?: நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட உள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 கருவிகள் இதில் சுமந்து செல்லப்பட்டுள்ளன. மின்காந்த துகள் மற்றும் காந்தப்புல அமைப்புகளை பயன்படுத்தி சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர் மற்றும் வெளிப்புற அடுக்குகளை (கொரோனா) ஆய்வு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் விண்கலம் ஏழு பேலோடுகளை எடுத்துச் செல்கிறது.

நாசாவின் பார்க்கர் இதற்கு முன் சூரியனில் இருந்து 7.8 மில்லியன் கிலோ மீட்டர் அருகில் சென்றது. அதேபோல் ஐரோப்பாவும் எல்1 பாயிண்டிற்கு இதேபோல் விண்கலத்தை அனுப்பி உள்ளது. அதன்பின் தற்போது இஸ்ரோ சார்பாக ஆதித்யா எல் 1 அனுப்பப்பட்டுள்ளது. இந்த பணிக்கான மொத்த செலவு சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தில் இருக்கும் liquid apogee motor (LAM) என்பதுதான் இதை விண்ணுக்கு சுமந்து செல்லும். அதாவது புவி வட்டப்பாதையில் பிஎஸ்எல்வி ஆதித்யாவை நிறுத்திய பின் அது பூமியை சுற்றி சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக வட்டப்பாதையை அதிகரிக்கும். இதில் வட்டப்பாதையை அதிகரிக்க liquid apogee motor (LAM) பயன்படுத்தப்படும்.

அப்படியே வட்டப்பாதையை அதிகரித்து எல் 1 பாயிண்ட் அருகே ஆதித்யா எல் 1 செல்லும். அங்கிருந்து மேலும் சில வட்டங்களை அடித்து liquid apogee motor (LAM) எல் 1 பாயிண்டில் சுற்ற தொடங்கும். இதற்கு பெரும்பாலும் 127 நாட்கள் ஆகும். அந்த வகையில் ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது .ஆதித்யா எல்-1 விண்கலம் 2வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+