சூரியனுக்கு அப்பால். சூப்பர்நோவா தகவல்கள்.. அசத்திய எக்ஸோபாட்.. இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
சென்னை: கருந்துளை, நெபுலா மற்றும் சூப்பர் நோவா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய எக்ஸோபாட் செயற்கைக்கோள் விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகளை சேகரித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவை சேர்ந்த செயற்கைக்கோள் ஒன்று சூரியனுக்கு அப்பால் உள்ள தகவல்களை சேகரித்தது இதுவே முதல்முறையாகும்.
இங்கு எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டது என்பது தத்துவம் மட்டுமல்ல, அறிவியல் விதியும் கூட. அந்த வகையில் விண்மீன்களுக்கும் அழிவு இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். ஆனால் அதன் பின்னர் அது என்ன ஆகும்? என்பது குறித்து பல்வேறு தகவல்கள் சொல்லப்படுகின்றன. சில விஞ்ஞானிகள் விண்மீன் வெடிப்பு கருந்துளையை உண்டாக்கும் என்று சொல்கிறார்கள், மற்ற சில விஞ்ஞானிகள் வேறு சில கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

எனவே இது தொடர்பான ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவும் கடந்த 1ம் தேதி முதல் இந்த ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது. இதற்காக எக்ஸோபாட் எனும் செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பியது. இது, கருந்துளை, நெபுலா மற்றும் விண்மீன் வெடிப்பு எனப்படும் சூப்பர் நோவா போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும்.
அந்த வகையில், இந்த செயற்கைக்கோள் முதன் முறையாக சூப்பர் நோவா குறித்த தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவை சேர்ந்த செயற்கைக்கோள் ஒன்று சூரியனுக்கு அப்பால் உள்ள தகவல்களை சேகரித்தது இதுவே முதல்முறையாகும். பூமியிலிருந்து 11,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 'காசியோபியா ஏ' எனும் சூப்பர் நோவாவிலிருந்து இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
எக்ஸோபாட் செயற்கைக்கோளில் எக்ஸ்ரே கதிர்களை ஆய்வு செய்வதற்காக இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதில் பொலரிமீட்டர் (POLIX) கருவியானது X-கதிர் துருவ முனைப்பை ஆய்வு செய்யும். அதே நேரத்தில். ஸ்பெக்ட்ரோஸ்கோபி (XSPECT) எனப்படும் மற்றொரு கருவி X-கதிர் மூலங்களின் நீண்ட கால நிறமாலை குறித்து ஆய்வு செய்யும். இந்த இரண்டாவது கருவியைதான் இஸ்ரோ, 'காசியோபியா ஏ' எனும் சூப்பர் நோவாவை நோக்கி திருப்பியிருந்தது.
எதிர்பார்த்தபடி இந்த சூப்பர் நோவாவாவிலிருந்து மெக்னீசியம், சிலிக்கான், சல்பர், ஆர்கான், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களின் எச்சங்கள் வெளியேறுவதை ஸ்பெக்ட்ரோஸ்கோபி கருவி கண்டுபிடித்திருக்கிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் நமது விண்மீன்களின் இறப்பு, கிரகங்களின் உருவாக்கம், விண்கற்கள் குறித்த மேலும் ஆழமாக தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications