திருவிழா மாதிரி.. கூலி (Coolie) படத்திற்கு பல்க் புக்கிங் செய்த ஐடி நிறுவனங்கள்.. ஊழியர்கள் கொண்டாட்டம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி (Coolie) ' திரைப்படம், வெளியீட்டிற்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத்தில் உள்ள பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்காக மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி உள்ளது. தங்கள் ஊழியர்களை டீம் லஞ்சிற்கு அழைத்து செல்வது போலவே கூலி படத்திற்கும் இவர்கள் டிக்கெட் புக் செய்துள்ளனர்.
சென்னை, பெங்களூர், மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள், படத்தின் முதல் வாரஇறுதி காட்சிகளுக்கான ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளன. முன்னணி விநியோகஸ்தர் ஒருவர், "பல நிறுவனங்களுக்கு இது ஒரு கார்ப்பரேட் ஈடுபாட்டு நடவடிக்கையாக மாறியுள்ளது. ஊழியர்களின் மன உறுதியை அதிகரிக்கும் ஒன்றாக இதை அவர்கள் பார்க்கிறார்கள். ரஜினிகாந்த் படத்திற்கு இந்த உற்சாகம் வேறு ஒரு மட்டத்தில் இருக்கும்," என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் கூலி (Coolie) டிக்கெட் புக்கிங்
இந்த ஆரம்பகட்ட ஆர்வம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. முதல் காட்சிக்கு முன்பே 'கூலி' பிரம்மாண்டமான வருவாயைப் பெற்றுள்ளது. கார்ப்பரேட் முன்பதிவுகளுடன், செயற்கைக்கோள் உரிமைகள், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஒப்பந்தங்கள் மற்றும் ஊடக கூட்டாண்மைகள் மூலமாகவும் கணிசமான தொகை ஈட்டப்பட்டுள்ளது.
தொழில் வல்லுநர்களின் மதிப்பீட்டின்படி, செயற்கைக்கோள் மற்றும் ஊடக உரிமைகள் மட்டும் வெளியீட்டிற்கு முந்தைய வருவாயில் ₹350 கோடிக்கு மேல் பங்களித்துள்ளன. மீதமுள்ள தொகை முன்கூட்டிய தியேட்டர் முன்பதிவுகள் மற்றும் பிராண்ட் இணைப்புகள் மூலம் வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "கூலி (Coolie) " திரைப்படம் வெளியீட்டிற்கு முன்பே ₹200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், ₹375 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 நெருங்கி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி (Coolie) ' திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள 'வார் 2' திரைப்படத்துடன் நேரடியாக மோதவிருந்தாலும், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படம் குறித்த ஆர்வமே அதிகம் உள்ளது. வார் 2 படத்தை விட பல மடங்கு புக்கிங் தியேட்டர்களில் நடந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் கூலி (Coolie)
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி (Coolie) ', அதிரடி மற்றும் உணர்ச்சிபூர்வமான கதையம்சம் கொண்ட ஒரு படமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. சூப்பர்ஸ்டாரின் வெகுஜன ஈர்ப்புக்கு ஏற்ற வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான டிரெய்லர், பல்வேறு தளங்களில் சாதனை அளவிலான பார்வைகளை குவித்து, படத்திற்கான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.
ஆகஸ்ட் 12, 2025 அன்று வெளியான தகவலின்படி, ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷன்-ஜூனியர் என்.டி.ஆர்-இன் வார் 2 ஆகிய படங்களுக்கு இடையே நடைபெறும் பாக்ஸ் ஆபிஸ் போட்டி முன்பதிவுகளில் ஒருதலைப்பட்சமாக உள்ளது. இரு படங்களும் ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் முன்பதிவில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னிலை வகிக்கிறது.
கூலி திரைப்படம் முன்பதிவு பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது குறித்து திரையுலக வட்டாரத்தினர் கூறுகையில், நேற்றைய நிலவரப்படி, கூலி திரைப்படம் உலகளவில் ₹75 கோடி முன்பதிவு வசூலித்துள்ளது, வார் 2 திரைப்படம் ₹10-15 கோடி வசூலித்துள்ளது. இன்றைய புதிய எண்களுடன், ரஜினிகாந்தின் கூலி (Coolie) திரைப்படம் முன்பதிவில் ₹80 கோடி வசூலைத் தாண்டி, தனது முன்னிலையை உறுதிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications