தூத்துக்குடியில் மையம் கொள்ளும் விஜய் கட்சி! தென் மாவட்டத்தில் முதல் மாநாடு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் தொடங்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு தென் மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி அல்லது நெல்லையில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை அரசியல் கட்சி கட்சி தொடங்கிய விஜயகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் மதுரை, திருச்சி, என்று தான் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். எதிலுமே சற்று மாற்றி யோசிக்கும் விஜய், தனது அரசியல் கட்சியை தென் மாவட்டத்தில் தொடங்க விருப்பப்படுகிறார். விஜயை பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டம் புதிது கிடையாது. ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேர் குடும்பங்களுக்கு ஆரவாரமின்றி நிதியுதவி அளித்தவர்.

It has been reported that the first conference of Tamilaga Vetri Kazhagam started by Vijay will be held in southern districts

அதேபோல் அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று நிவாரண உதவிகள் வழங்கியவர். இதனால் விஜய்க்கு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் உள்ளது. தீபாவளிக்கு முன்னதாகவே ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்பட ஷூட்டிங்கை முடிக்கத் திட்டமிட்டுள்ள விஜய், அதன் பிறகு முழு நேர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் தமிழ்நாட்டில் எகிறி வருகிறது. நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் லிஸ்ட் விஜய் மேஜையில் இருப்பதாகவும் சாதக, பாதகங்களை ஆராய்ந்து அவர் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விஜய் இன்னும் நாட்களை கழிக்காமல் சூட்டோடு சூடாக உடனே இப்போதே அரசியலுக்கு வர வேண்டும் என அவரது நலன் விரும்பியாக அறியப்படும் பழ.கருப்பையா வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கது.

இதனால் எப்படி பார்த்தாலும் இன்னும் 6 மாதங்களில் விஜய் கள அரசியலுக்கு வந்துவிடுவார், மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழக வெற்றி கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இப்போதே அவரவர் பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு விஜயின் வருகையால் தமிழக அரசியல் களம் அனல் பறக்கும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+