"போனி” ஆகலையா? ”வால்டர் வெற்றிவேல்" கதையா? 100 கோடி வசூலை தாண்டிய “வலிமை”..தெறிக்கவிடும் ரசிகர்கள்.!
சென்னை : வலிமை திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த திரைப்படம் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதனை அஜித் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் தயாரிக்கப்பட்ட வலிமை திரைப்படம் இம்மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் பல கட்ட இழுபறிக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடியே உலகம் முழுவதும் வெளியானது.

அஜித்தின் வலிமை
முன்னதாக ரசிகர்களின் கோரிக்கையை அடுத்து வலிமை படத்தின் டைட்டில், மோஷன் போஸ்டர், டீசர், சிங்கிள், ட்ரைலர் என அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமூகப் பிரச்சினைகளைப் பேசும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என இயக்குனர் வினோத் கூறியிருந்த நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வேற லெவல் ஹிட்டானது.

ரசிகர்கள் ஆர்வம்
பிரம்மாண்ட சண்டைக்காட்சிகள் அட்டகாசமான பாடல்கள் வேற லெவல் பைக் ஸ்டண்ட் காட்சிகள் என அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க இருப்பதாக வினோத் கூறியிருந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி இப்படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வலிமை திரைப்படம் இல்லை என சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. படத்தின் பிற்பகுதி மிகவும் மெதுவாகச் செல்வதாகவும் சென்டிமென்ட் மற்றும் பைக் ஸ்டண்ட் காட்சிகளில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கொடுக்கவில்லை என எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டது.

கடும் விமர்சனம்
நீண்ட நேர சண்டைக் காட்சிகள், தமிழ் சினிமாவின் பழைய டெம்பிளேட் கதையான நல்ல போலீஸ் கெட்ட தம்பி, அம்மா செண்டிமெண்ட் என போர் அடிப்பதாகவும், கிட்டத்தட்ட 3 மணி நேர நீளமான திரைப்படம் என சலிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. குறிப்பாக வால்டர் வெற்றிவேல் கதை எனவும் சிலர் கலாய்த்தனர். ஆனால் வழக்கம்போல் அஜித் திரையில் வந்து நின்றாலே போதும் என அஜித் ரசிகர்கள் கூறிய நிலையில், படத்தை வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக கூறி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

100 கோடி வசூல்
இந்த நிலையில் இரண்டே நாட்களில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 65 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் 20.5 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் வெளிநாடுகளில் 20.60 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் மொத்தம் 96 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனையடுத்து வலிமை திரைப்படம் வெற்றிப் படம்தான் எனவும், எதிர்மறையான விமர்சங்கள் இருந்தாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications