"உலகறிந்த ரகசியம்.." பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை.. நாராயணன் திருப்பதி சொன்னதை பாருங்க
சென்னை: வருமான வரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள நாராயணன் திருப்பதி பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை என்றார்.
திமுகவின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினின் உரையை அமைச்சர் உதயநிதி வாசித்தார். முதல்வர் தனது உரையில் பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். முதல்வர் மு.க ஸ்டாலின் கூறுகையில், பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாகவே வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் செயல்படுகிறது. அமலாக்கத்துறைக்கும் வருமான வரித்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் அவரவர் அலுவலகத்தை விட்டு வெளியே கூட வருவது இல்லை|" என்று சாடியிருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் பெச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
வருமான வரித்துறை & அமலாக்கத்துறையின் கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவரவர் அலுவலகங்களை விட்டுக்கூட வெளியே வராதது ஏன்?
அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் Conviction Rate 1 விழுக்காடு கூட இல்லையே ஏன்? : முதல்வர் மு.க.ஸ்டாலின். (பேச்சை படித்தது உதயநிதி ஸ்டாலின்)
1. பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை என்பது மட்டுமே உலகறிந்த ரகசியம். ஊழல் புரிந்தவர், மோசடி செய்தவர் என்று நீங்கள் (தி மு க) குற்றம் சாட்டிய செந்தில் பாலாஜியை அமைச்சராக்கி அழகு பார்த்த நீங்கள் இந்த கேள்வியை கேட்கலாமா?
2. உங்கள் ஆட்சியில் உங்கள் அமைச்சராலேயே அலுவலகத்தை விட்டு ஊழல் வெளியே வந்தது(பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்) என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
3. தவறு. அது 1% அல்ல, 25% . விஞ்ஞான ஊழலை முன்னெடுப்பவர்கள் விரைவில் அகப்படுவார்கள்" என்று பதிவிட்டுள்ளர்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications