வாங்க வாங்க.. எல்லோரும் வாங்க.. தடபுடலாக தயாராகும் பாஜக.. கதி கலங்கி காணப்படும் கட்சிகள்!
பாஜக தமிழகத்தில் காலூன்ற பல்வேறு வியூகங்களை எடுத்து வருகிறது
சென்னை: தமிழக அரசியலில் ஒரு புது தகவல் றெக்கை கட்டி பறந்து வந்து கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளின் சில "முன்னாள்கள்" பாஜக பக்கம் வரப் போகிறார்களாம்
பொதுவாக எந்த தேர்தல் நடந்தாலும், அதன் முடிவுகளை வைத்து ஒரு சில மாற்றங்கள், குறிப்பாக கட்சி தாவல்கள் இருப்பது இயல்பு. அந்த வகையில் தமிழகத்தில் எம்பி தேர்தல், வேலூர் தேர்தல், இடைத்தேர்தல் என்று 3 வகையான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
இதில் எம்பி தேர்தலின்போது, திமுகவுக்கு தேசிய அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அதே சமயத்தில், சட்டசபை இடைத் தேர்தலில் தேவையான வெற்றியைப் பெற்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி தக்க வைத்தது.

நிர்வாகிகள்
யாரும் எதிர்பாராத வகையில் அமமுக படு தோல்வியை சந்தித்தது. இதனால், வலுவான இடத்தில் இருந்த அமமுகவின் பல நிர்வாகிகள் அதிமுக பக்கம் சாய்ந்து விட்டனர். சிலர் திமுகவை தேடி ஓடி விட்டனர். அதேபோல, நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் அதிமுக தனது பலத்தை நிரூபித்துள்ளது.

முன்னாள்கள்
இந்த நிலையில் தற்போது பாஜகவுக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கப் போகிறது. அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் அதிருப்தி பிரமுகர்கள் பலர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி இணைய முயல்பவர்கள் எல்லாம், பல தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காதவர்கள், கட்சி தலைமையால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்கள், சில முன்னாள் பதவிக்காரர்கள் என லிஸ்ட்டில் உள்ளனராம்.

இந்துத்துவா
இவர்கள் மாற்று கட்சிக்கு போக பிடிக்காமல், பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திராவிட கட்சிகளில் இருந்து இந்துத்துவா கட்சிக்கு தாவ போகும் இந்த மூத்த தலைகளை வரவேற்க பாஜகவும் கூட ரெடியாகி விட்டதாக சொல்கிறார்கள். காரணம், இவர்களால் பாஜகவுக்கும் கூடுதல் பலம் கிடைக்கும் என்பதால். இதுபோக, பட்டியலின தலைவர்களையும் தன் பக்கம் இழுக்கும் வியூகத்தையும் பாஜக கையில் எடுத்துள்ளது.

கதி கலங்கும் கட்சிகள்
அநேகமாக சென்னையில் அமித்ஷா தலைமையில் முன்னாள்கள் கட்சியில் இணையும் விழா நடக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். வரும் சட்டசபைத் தேர்தலுக்கு மிகப் பெரிய அளவில் தயாராக திட்டமிட்டுள்ளது பாஜக. கட்சியினர் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர். வருகிற தேர்தலைப் பொறுத்தவரை தமிழகத்தில் திமுக மட்டுமே பாஜகவுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. எனவே அந்த கோட்டையைத் தகர்க்கும் திட்டங்களும் கைவசம் உள்ளதாம். இதனால் பாஜகவின் வியூகம் தெரியாமல் மற்ற கட்சிகள் பொறி கலங்கிப் போய் உள்ளனராம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications