திடீரென "ஸ்ட்ரேட்டஜி"யை மாற்றிய திமுக.. 5 + 5 சரியா வருமா? என்ன நடக்கிறது கூட்டணியில்?!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை சீட் ஒதுக்கப்படும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது
சென்னை: நாளுக்கு நாள் திமுக கூட்டணியில் நிலவரங்களும், முடிவுகளும், யோசனைகளும், மாறி கொண்டே இருக்கின்றன.. அந்த வகையில் அரசியல் களமே பரபரத்து காணப்படுகிறது.
கடந்த சில தினங்களாகவே கூட்டணி, சீட் விவகாரங்கள் சற்று சூடு பிடித்துள்ளன.. எதுவும் ஓபனாக தெரியவில்லை என்றாலும், விறுவிறுத்தன்மை மட்டும் நிறைய தென்பட்டு வருகின்றன.
கூட்டணி கட்சிகளுக்கு அவ்வளவாக சீட்டுகளை ஒதுக்க வேண்டாம் என்று ஏற்கனவே ஐபேக் நிறுவனம் திமுகவுக்கு வலியுறுத்தியபடியே வந்திருக்கிறது.. அதற்கு காரணம், பெரும்பாலான இடங்களில் திமுகவே போட்டியிட வேண்டும் என்பதால்தான்.

தகவல்கள்
ஒருவேளை கூட்டணிக்கு ஒதுக்கினாலும், பெருமளவு இடங்களில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவே வலியுறுத்தப்படும் என்றும் தகவல்கள் கசிந்தன.. அதனால்தான், 2 நாளைக்கு முன்புகூட 4-க்கு 4 இடங்களை விசிகவுக்கு ஒதுக்க முடிவானது.

கட்சி சின்னம்
அதாவது, விசிகவுக்கு 4 + 4 என்ற ரீதியில் என்றால், பாதி உதயசூரியன் சின்னம், மீதி பாதி சொந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுவது.. சொந்த கட்சி சின்னத்தில் தோற்றாலும், உதயசூரியன் சின்னத்தின் வெற்றியாவது திமுகவுக்கு கிடைக்குமே என்று கணக்கு போட்டது.

திருமா
ஏனென்றால், சிதம்பரத்தில் சொந்த கட்சி சின்னத்தில் ஜஸ்ட் பாஸ் ஆகி தான் வாக்குகளை எடுத்திருந்தார் திருமா.. அதனால் இந்த முறை தனி தனி சின்னத்தில் போட்டியிடலாம்... அல்லது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சின்னத்தில் போட்டியிடும் நிலைமையும் வரலாம் என்பதால்தான் இப்படி ஒரு யோசனையை திமுக செய்திருந்தது.

புது தகவல்
ஆனால், இதற்கெல்லாம் விசிக ஒப்புக் கொள்ளுமா என தெரியாத சூழலில் இன்னொரு தகவல் இப்போது வெளியாகி உள்ளது.. அதன்படி, 10 இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. 5 தொகுதிகளில், உதயசூரியனிலும், மீதி 5 தொகுதிகளில் தனி சின்னத்திலும் விசிகவை போட்டியிட சொல்லலாம் என்று திமுக யோசித்து வருகிறதாம்.. இது மறுபடியும் விசிகவுக்கு சிக்கலைத்தான் உண்டு பண்ணி இருக்கிறதாம்.

மாறுமோ?
இந்த நிமிஷம் வரை கூட்டணி தொடர்பாக எந்த ஒரு தகவலுமே உறுதிப்படாத நிலையில், இந்த 5 + 5 என்பதும் இறுதிப்படுத்தப்படுமா? அல்லது வேறு ஒரு முடிவு இன்னும் 2 நாளில் வெடித்து கிளம்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications