சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷா வைத்திருக்கும் பிளான்.. அடுத்த தமிழக பாஜக தலைவர் யார்.. வெல்வாரா எச். ஆர்!

எச். ராஜா தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழக பாஜகவுக்கு அடுத்த தலைவர் யார்.. கடும் போட்டியில் 6 தலைவர்கள்

    சென்னை: போற போக்கை பார்த்தால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக பாஜக தலைவர் ஆகிவிடுவார் என்றே சொல்கிறார்கள்.

    இப்போதைக்கு தமிழக மாநில தலைமை பதவி காலியாக உள்ளது. இந்த பதவியை பிடிக்க கட்சிக்குள் 6,7 பேர் கடும் போட்டியில் உள்ளனர். குறிப்பாக எச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. இதில் பொன். ராதாகிருஷ்ணனுக்கும், எச்.ராஜாவுக்கும்தான் டஃப் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இவர்கள் 4 பேருமே சீனியர்கள், 4 பேருமே சர்ச்சையை கிளப்புபவர்கள், 4 பேருமே பாஜக தலைமைக்கு நெருக்கடியை தருபவர்கள் என்பதாலேயே இவர்கள் 4 பேரின் பெயர்களும் அடிபடுகின்றன.

    தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேர்.. கைது செய்யப்படமாட்டார்கள்.. வெளியுறவுத் துறைதேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட 19 லட்சம் பேர்.. கைது செய்யப்படமாட்டார்கள்.. வெளியுறவுத் துறை

    சிபி ஆர்

    சிபி ஆர்

    சிபி ராதாகிருஷ்ணன், வானதியை பொறுத்தவரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள். கொங்குவின் வாக்குகளை மொத்தமாகவே அள்ளும் அளவுக்கு அந்த பகுதிகளில் வலிமையானவர்கள். அதனால் கொங்கு என்பதை மனதில் வைத்து பாஜக தலைமை யோசித்தால், சிபி ராதாகிருஷ்ணனுக்கும், வானதிக்கும் ஒரே மாதிரியான முடிவைதான் எடுத்து வைக்கும்.

    எச்.ராஜா

    எச்.ராஜா

    ஆனால் ஏற்கனவே தமிழக பாஜகவுக்கு ஒரு பெண் தலைவராகி விட்டதால், அடுத்து ஒரு பெண்ணை பாஜக தலைவராக்குமா என்பது சந்தேகம்தான். எனவே வாய்ப்பு சிபிஆருக்கு நிறைய உள்ளது. அதேபோல, எச்.ராஜாவை பொறுத்தவரை, தேசிய அளவில் பொறுப்பை வகித்தாலும், இதுவரை மாநில தலைவர் ஆனது இல்லை.

    திமுக

    திமுக

    போன முறை தமிழிசை தலைவராக அறிவிக்கப்பட்ட நேரத்தில் எச்.ராஜாவும் அப்போது போட்டியில் இருந்தார். எனவே இந்த முறை தலைவர் பதவியை கைப்பற்றி விட அவர் முனைப்பு காட்டி வருகிறார்.இவர் பாஜக தலைவரானால், திமுகவை எளிதாக சமாளிப்பார், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை இவர் திறமையாக சமாளிப்பார் என்று நம்பப்படுகிறது.

    இந்துத்துவா

    இந்துத்துவா

    அதனால், சாதிய ரீதியாக, அதாவது கொங்கு வாக்குகளை அள்ள வேண்டும் என்று முடிவெடுத்தால், சிபிஆர் பெயரே முன்னிறுத்தப்படும். இந்துத்துவா அடிப்படையில் என்று முடிவெடுத்தால் எச்.ராஜா பெயர் முன்னிறுத்தப்படும். இதுதான் பாஜக தலைமையின் இப்போதைய கருத்துணர்வாக தெரிகிறது. அந்த வகையில் எச்.ராஜா ரேஸில் கொஞ்சம் முந்தி உள்ளதாக சொல்கிறார்கள்.

    English summary
    Sources say that There is tough competition between H Raja and CP Radhakrishnan for TN BJP Leader post
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X