வெறும் புள்ளி விவரத்தை வைத்து பேசுவது தவறானது.. ப. சிதம்பரத்திற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
சென்னை: மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. வெறும் புள்ளி விவரத்தை வைத்து பேசுவது தவறானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
முன்னதாக, தனது டிவிட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், மனிதக் கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசிடம் பணமில்லையா? மனமில்லையா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதே நேரம், இந்தியாவில் முதலிடத்தில் தமிழ்நாடு என்பது வெட்கக்கேடு என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தனிநபர் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவில், 1993 முதல் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மட்டும் 144 பேர் என்றும் புள்ளி விவரத்தை வெளியிட்டார். உயிரிழந்த 144 மனிதர்கள் எந்தச் சமுதாயங்களைச் சார்ந்தவர்கள் என்று விசாரித்துப் பாருங்களேன் என்றும் கூறியிருந்தார்.
இந்தநிலையில், சென்னை சைதாப்பேட்டை மீன் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ப.சிதம்பரத்தின் டிவிட்டர் பதிவு குறித்து பதிலளித்தார். அப்போது, மனித கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன என்றும், வெறும் புள்ளி விவரத்தை வைத்து பேசுவது தவறானது என்றும் கூறினார்.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது தடுக்கப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் இறப்பு சம்பவங்கள் நடப்பதில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications