முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த தர்மசங்கடம்.. சேகர் ரெட்டி மேட்டரில் திமுக அமைச்சர் பெயர்.. நெருக்கடி?
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் சேகர் ரெட்டி விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை: சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள பெயரில் அப்போதைய அதிமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் பெயரும் இருந்தது. இந்நிலையில் தற்போது திமுகவில் இணைந்து அமைச்சராக உள்ள அவருக்கும் நோட்டீஸ் சென்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேகர் ரெட்டி டைரி விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.. காட்பாடியை சேர்ந்தவர் சேகர் ரெட்டி. ஆரம்பத்தில் சாதாரண காண்ட்ராக்டராக இருந்தவர்..
பிறகு நாளுக்கு நாள் அரசியல் செல்வாக்கை பெருக்கி கொண்டார்.. அதனால் பெரிய பெரிய காண்ட்ராக்ட்கள் கிடைக்கும் அளவுக்கு உயர்ந்தார்..

தேவஸ்தானம்
இதற்கு பிறகு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, திருமலை - திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்குத் தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். எனினும் ஜெ.சேகர் என்ற சேகர் ரெட்டி பெயரை சொன்னதுமே நமக்கு கண் முன் வந்து நிற்கும் உருவம் ஓபிஎஸ்தான்..!

நட்பு
கடந்த காலங்களில் இவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் இணக்கம் இருந்தது.. அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தியவர் இந்த ரெட்டிதான்.. தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தினார்.. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது, சேகர் ரெட்டியின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிய வந்தது..

போட்டோ
ஒருமுறை ஓபிஎஸ் தலையில் மொட்டை அடித்து கொண்டு, ரெட்டியுடன் திருப்பதி கோவிலில் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலானது.. இது இவர்களின் இறுக்கமான நட்புக்கும் சாட்சியாகவும் விளங்கியது... இதற்கு பிறகுதான், திருப்பதி தேவஸ்தானத்தின் பதவியைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாக, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிவு செய்து கைதுசெய்தது...

தண்டனை
அப்போது சோதனையில் அவரது டைரி ஒன்று சிக்கி, அந்த டைரியில் ஓபிஎஸ் பெயர் அடிபட்டு.. இப்படி ஒரே களேபரமாக அரசியல் களம் அன்றைய தினம் பரபரத்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ, அவர்ளின் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு, சட்ட ரீதியான தண்டனை தரப்படும் என்று ஸ்டாலின் பிரச்சாரங்களில் சொல்லி கொண்டே வந்தார்.. அப்போதே சேகர் ரெட்டியின் பெயரும் பலருக்கு நினைவுக்கு வந்தது..

நிவாரண நிதி
ஆனால், ஸ்டாலின் முதல்வரானதுமே, சேகர் ரெட்டி நேரில் வந்து சந்தித்து பேசினார்.. கொரோனா நிவாரண நிதியையும் ஒரு கோடி ரூபாய் தந்துவிட்டு போனார். இதனால் மறுபடியும் மணல் ஒப்பந்தம் சேகர் ரெட்டிக்கே தரப்பட்டுவிடுமோ என்ற ஒரு சந்தேகமும் எழுந்தது.. ஆந்திரத்தின் விஐபி ஒருவர்தாம் இதற்கெல்லாம் காரணம் என்றும், திமுக மேலிடத்துக்கு நெருக்கமானவர்களிடம் இது தொடர்பாக பேசியதாகவும் செய்திகள் கிசுகிசுக்கப்பட்டன.

டைரி விவகாரம்
இப்படிப்பட்ட சூழலில்தான், சேகர் ரெட்டி டைரி விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.. சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் அதிமுக முக்கிய புள்ளிகள் பலரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வந்தன.. அதுகுறித்துதான் வருமான வரித்துறையினர் விசாரித்தும் வந்தனர்.. இப்போது அந்த விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஓபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் உள்ளிட்ட 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.... அந்த வகையில், அதிமுகவில் இருந்து பிரிந்து, திமுகவில் இணைந்து தற்போது திமுக அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மோசடி வழக்கு
இதை திமுக எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.. ஏற்கனவே வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி சிக்கி உள்ளார்.. இந்த வழக்கின் வாக்குமூலங்களை பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 2 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

ஆட்சி
இந்த வழக்கில் இருந்து அவருக்கு விலக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் என்கிறார்கள்.. அமைச்சர் பதவியில் இருந்து, மோசடி வழக்கை எதிர்கொள்வது என்பது எங்கும் நடக்காத ஒன்று.. ஆட்சி பறிபோன பிறகுதான் இப்படிப்பட்டமோசடி வழக்குகளை ஆளும்கட்சி தொடுக்கும் என்பது நடைமுறை.. ஆனால், தற்போது அமைச்சராக இருந்துகொண்டே வழக்கையும் சந்தித்து வருகிறார் செந்தில்பாலாஜி..

ஸ்டாலின்
இப்போது கூடுதலாக வருமான வரி நோட்டீஸ் விவகாரத்திலும் அவர் பெயர் அடிபடுவதும், அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் திமுகவுக்கு நெருக்கடியை தந்துள்ளது.. மத்திய அரசுக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கரூரில் செந்தில்பாலாஜி மேற்கொண்ட செயல்பாடுகளை பார்த்து முதல்வர் ஸ்டாலின் அவரை நேரடியாக பாராட்டியதாக செய்திகளும் வந்த நிலையில், தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் ஸ்டாலினுக்கே தர்மசங்கடத்தை தந்துள்ளது.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications