“மாஸ்டரையே” பிடித்த ஐடி.. சிக்கலில் தமிழ் சினிமா! படப்பிடிப்புகள் முடங்கும் நிலை -தவிப்பில் “தலைகள்”
சென்னை: தமிழ் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் தயாரிப்பாளர்கள் இல்லங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையால் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video
மதுரை அன்பு என்று அழைக்கப்படும் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தமிழ் மட்டுமின்றி இந்திய அளவிலான சினிமாக்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் அன்புச்செழியனிடமே கடன் பெற்று திரைப்படங்களை தயாரித்து வருகின்றன.
இந்த நிலையில்தான் 2வது நாளாக அன்புவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை 5:30 மணி முதல் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அலுவலகங்கள், சைதாப்பேட்டையில் உள்ள திரையரங்கம், மதுரையில் உள்ள திரையரங்கம் என பல இடங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தயாரிப்பாளர்கள்
இதேபோல், முன்னணி தயாரிப்பாளர்களான சத்யஜோதி தயாரிப்பு நிறுவன தலைவர் தியாகராஜன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தலைவர் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ், ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவன தலைவர் ஞானவேல் ராஜா, வி கிரியேசன்ஸ் தயாரிப்பு நிறுவன தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா உள்ளிட்டோரின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.

20 தயாரிப்பாளர்கள்
இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாள பிஸ்மி தெரிவிக்கையில், "மதுரை அன்பு வீட்டுக்கு வருமான வரித்துறை முன்பு சோதனை மேற்கொண்டபோது, எந்தெந்த தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்ற கணக்கு சிக்கியது. ஆனால், அந்த தயாரிப்பாளர்களிடம் அன்புச்செழியனிடம் பணம் வாங்கியதற்கான எந்த கணக்கும் இல்லை. எனவே வருமான வரித்துறை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களிடம் இதுகுறித்து விளக்கம்கோரி நோட்டீஸ் அனுப்பியது.

நடிகர் தனுஷ்
ஆனால், மதுரை அன்பு அந்த தயாரிப்பாளர்களிடம் தான் சொல்வதைபோல் பதிலளிக்குமாறு அறிவுறுத்தினாராம். இவர்கள் பதிலே கொடுக்காமல் இருந்ததால் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன். நமக்கு கிடைத்த தகவலின்படி 20 முன்னணி தயாரிப்பாளர்கள் இந்த வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாக இருக்கிறார்கள். இதில் நடிகர் தனுஷும் அடக்கம்." என்றார்.

முக்கிய நடிகர்கள்
இதில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வரும் தயாரிப்பு நிறுவனங்களே தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களாக திகழ்பவை. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்தி, ஆர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இந்த தயாரிப்பாளர்களே தயாரித்து உள்ளனர். தயாரித்தும் வருகின்றனர்.

வலைப்பின்னல்
இந்த நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களை தயாரிக்கும் வேறு நிறுவனங்களும் மதுரை அன்புவிடம் நிதி பெற்றவர்களாக இருக்கலாம். இப்படி ஏதாவது ஒருவகையில் இதில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களில் இவர்களுடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி ஒரு வலைப்பின்னலாகவே தமிழ் சினிமாவின் நிதி ஆதாரம் இருக்கிறது. அதிமுகவில் அங்கம் வகித்தாலும் அனைத்து கட்சியினருடன் நெருக்கம் பாராடும் மதுரை அன்புவின் இல்ல திருமண விழாவில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

மதுரை அன்பு
சினிமாவுக்கு பைனான்ஸ் செய்வது மட்டுமின்றி கோபுரம் சினிமாஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களையும் தயாரித்து வந்த இவர், சொந்தமான திரையரங்கத்தையும் நடத்தி வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு மதுரை அன்புவே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத மாஸ்டராக இருந்து வரும் அன்புச்செழியன் மற்றும் மூத்த தயாரிப்பாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடக்கும் ஐடி சோதனையால் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடங்கும் நிலையும் ஏற்படலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications