சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வரி ஏய்ப்பு புகார்.. தமிழகம் முழுவதும் லலிதா ஜுவல்லரி கடைகளில் ஐடி ரெய்டு!

Google Oneindia Tamil News

சென்னை: லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Recommended Video

    லலிதா ஜூவல்லரியில் திடீர் ரெய்டு… வரி ஏய்ப்பு புகார்.. வருமானவரித் துறை அதிரடி!

    தமிழகம் முழுவதும் லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் தலைமையிடமான சென்னை, மதுரை, கோவை என பல இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது. வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல்கட்டமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    IT Raid in Lalitha jewellery shops around Tamil Nadu

    நீண்ட காலமாக லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் கணக்குகளை கண்காணித்து வந்ததாகவும், தற்போது வரி ஏய்ப்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெறுவதாக வருமானவரித் துறையினர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு இடமாக இந்த சோதனையானது நடைபெறும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

    திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்!திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகும் வரை.. அதிமுக- தேமுதிக இடையே இழுபறி நிலைதான்!

    தொடர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு இந்த சோதனையானது நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சோதனையின் முடிவில், வரி ஏய்ப்பு எவ்வளவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும், வருமானம் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்த பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    IT Raid in Lalitha jewellery shops
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X