8 வது மாடிக்கு ஏன் போனார் டெனிதா.. என்ன நடந்தது.. இளம் பெண் தற்கொலையில் பரபர தகவல்கள்!
Recommended Video
சென்னை: வேலையில் சேர்ந்த ஒரே நாளில் 8-வது மாடியில் இருந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருச்சியை சேர்ந்தவர் டெனிதா ஜீலியஸ். 24 வயதாகிறது. பிஏ ஆங்கிலம் டிகிரி முடித்திருக்கிறார். ஏற்கனவே வடபழனியில் ஒரு நிறுவனத்தில் வேலையில் இருந்தவர், அம்பத்தூர் ஐடி நிறுவனத்துக்கு வேலைக்கு அப்ளை செய்திருக்கிறார்.
கடந்த 18-ம் தேதிதான் இன்டர்வியூ நடந்துள்ளது. அன்றைய தினமே டெனிதா செலக்ட் ஆகி உள்ளார். பிறகு மறுநாளே வேலைக்கும் சேர்ந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் வேலை முடிந்தபிறகு, நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து திடீரென விழுந்து உயிரிழந்தார். இதை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசர் டெனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

8-வது மாடி
ஆனால் இவர் வேலையில் சேர்ந்து ஒருநாள்தான் ஆனது என்பதால், இவரை பற்றி ஆபீசில் யாருக்குமே எந்த விவரமும் தெரியவில்லை. உண்மையிலேயே டெனிதா தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது தவறி விழுந்தாரா என்று தெரியாமல், 8-வது மாடிக்கு அந்த நேரத்தில் ஏன் போனார் என்றும் புரியாமல்தான் அங்கிருக்கும் சிசிடிவி கேமராவை கொண்டு விசாரணை ஆரம்பமானது.

பெற்றோர்
மேலும் ஐடி நிறுவன அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டெனித்தாவின் பெற்றோரிடமும், அம்பத்தூர் தொழிற்போட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான், ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

உடல்எடை
டெனிதா சற்று உடல் குண்டாக இருப்பாராம். அதனால், அடிக்கடி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இதைதவிர உடல்எடை உடைய உடற்பயிற்சிகளையும் செய்து வந்திருக்கிறார். இதற்கு முன்பு வேலை பார்க்கும் அலுவலகத்தில் கூட பெரும்பாலும் லிப்டை தவிர்த்து, படிக்கட்டுகளில் ஏறிதான் மாடிக்கு போவாராம்.

தவறி விழுந்தாரா?
அதன்படி நேற்றும் வேலை முடித்துவிட்டு, உடற்பயிற்சிக்காக படிக்கட்டு வழியாகவே 8 மாடி கட்டிடத்தில் ஏறி இறங்கி கொண்டு இருந்திருக்கிறார். அப்படி 8-வது மாடிக்கு சென்றுவிட்டு, திரும்பவும், படிக்கட்டு வழியாகவே இறங்கி கொண்டிருக்கும்போதுதான், தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், டெனிதாவின் மரணத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா, அல்லது தற்கொலையா என்ற விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications