காங்கிரசில் பொறுப்பு கேட்ட விஜய்.. ஆனால் இந்த ஐடியா கொடுத்ததே ராகுல் காந்தி தான்.. விஜயதாரணி
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பிக்க ராகுல் காந்தி தான் காரணம் என்றும், இதற்கு முன்பு நடிகர் விஜய் காங்கிரசில் தான் சேர நினைத்தார் என்றும் பாஜக நிர்வாகி விஜயதாரணி கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்த விஜயதாரணி இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நேரடி அரசியலில் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி கொடியை துவங்கியிருக்கும் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என்று அறிவித்து கட்சி பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி கட்சியின் கொடி வரை தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில், கட்சியின் மாநில மாநாடு ஒன்றையும் நடத்த விஜய் திட்டமிட்டு இருக்கிறார். விஜயை பொருத்தவரை திரையுலகில் இன்று டாப் நடிகராகவே உள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், தற்போது கட்சி தொடங்கினாலும், கடந்த பல ஆண்டுகளாகவே தனது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தியே வந்தார்.
தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதில் தொடங்கி படிப்படியாக அரசியலில் கால் பதிக்கும் வகையிலையே விஜயின் செயல்பாடுகள் கடந்த காலங்களில் இருந்தன. இந்த நிலையில், விஜய் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், ராகுல் காந்தி கூறியதன் அடிப்படையில் தான் தற்போது விஜய் கட்சி தொடங்கியதாகவும் பாஜக நிர்வாகி விஜயதாரணி கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த விஜயதாரணி கூறியதாவது:- விஜய் இப்போது கட்சி ஆரம்பித்துள்ளார் என்றால் அதற்கு காரணமே ராகுல் காந்தி தான். ராகுல் காந்தியை விஜய் பார்க்க சென்றிருந்த பொது காங்கிரசில் ஒரு பொறுப்பு கொடுங்க என்று தான் கேட்டிருந்தார். அப்போது ராகுல் காந்தி அவர்கள் தான், நீங்க தமிழ்நாட்டில் பெரிய ஸ்டாராக இருக்கீங்க..

எனவே நீங்க தனியா ஒரு கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஜொலிக்கலாம். அதற்கான கெப்பாசிட்டி உங்களிடம் இருக்கிறது. ஏன் ஒரு கட்சியில் ஒரு பொறுப்புக்கு மட்டும் ஆசைப்படுறீங்க. அப்படின்னு சொல்லி அனுப்பியதால் தான் இன்று விஜய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளார். ராகுல் காந்தி அன்றைக்கே அப்படி சொன்னதால் தான் இன்று விஜய் கட்சி தொடங்கியுள்ளார். ராகுல் காந்தி அன்றே சொன்ன ஐடியா தான் இது.
நான் காங்கிரசில் இருந்ததால் தான் இந்த உண்மை எனக்கு தெரியும். இதனால் விஜய்க்கும் காங்கிரசுக்கு ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. விஜய் யாரோடு கூட்டணி வைப்பார் என்பது அவருடைய விருப்பம். இதேபோல் விஜய் பிடிவாதமாக அரசியலில் தொடரவேண்டும். இதுக்கு பின்னர் அவருடைய செயல்பாடு எப்படி இருக்கப் போகிறது என்று தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்?












Click it and Unblock the Notifications