தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் -சென்னை வானிலை மையம்
சென்னை: கோவை, நீலகிரி, உட்பட தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக இந்த மழைபெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில்,

காற்றின் திசைவேக மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்கிழமையும் நாளை மறுதினம் புதன்கிழமையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் இதர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே கடந்த ஒரு வாரமாகவே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் சென்னையை பொறுத்தவரை கனமழைக்கு வாய்ப்பில்லை என்றும் லேசான மழை மட்டுமே பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
-
நைட் முழுக்க கொட்ட போகுது மழை.. சென்னை உட்பட 26 மாவட்டங்களில் குளுகுளு கிளைமேட்! வானிலை மையம் அலர்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications