இதே வேகம் வேளச்சேரி தாம்பரம் சாலையை அகலப்படுத்துவதில் வந்தால் நல்லது.. அமைச்சருக்கு நெட்டிசன் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்- நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதில் பெயர் பலகையில் தமிழ், ஆங்கிலத்துடன், இந்தியிலும் பெயர் பலகை வைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து இரவோடு இரவாக ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது. அத்துடன், அதிகாரிகள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுபற்றி கருத்து தெரிவித்த நெட்டிசன் ஒருவர், இதே வேகம் சென்னையில் உள்ள வேளச்சேரி தாம்பரம் சாலையை அகல்படுத்துவதில் வந்தால் நல்லது. இந்தியில் எழுதினால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் சாலை விரிவாக்கம் செய்யாமல் இருந்தால் பலருக்கும் பாதிப்பு உண்டு என கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்- நாசரேத் இடையே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சாத்தான்குளம் திருச்செந்தூர் ரோடு விலக்கு அருகில் புதிதாக வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, நெல்லைக்கு செல்லும் முக்கிய வழித்தடங்கள் அம்புகுறியிட்டு காட்டப்பட்டு இருந்தது.

Velachery Tambaram

அந்த பலகையில், முதலில் ஊர் பெயர்கள் தமிழிலும், அடுத்து இந்தியிலும், 3-வதாக ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உள்ளன. வழக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே ஊர் பெயர்கள் இடம்பெறுவது வழக்கம், இந்தப் புதிய பலகையில் இந்தியிலும் ஊர் பெயர்கள் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஆக மாறியது.

இது சமூக வலைதளங்களிலும், அரசியல் கட்சியினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டனர். இதன் எதிரொலியாக வழிகாட்டி பெயர் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துகள் அனைத்தும் பச்சை நிற 'ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கப்பட்டன. இந்தி எழுத்துக்கள் மட்டும் இரவோடு இரவாக 'ஸ்டிக்கர்' ஒட்டி மறைக்கப்பட்டது. இது தற்போது வடமாநிலங்களில் பெரிய அளிில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் பணிகளில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முத்துலட்சுமி, உதவி பொறியாளர் பூமிநாதன் ஆகியோரை அதிரடியாக பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து தலைமை பொறியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்திருந்தார். அந்த விளக்கத்தை டேக் செய்த நெட்டிசன் ஒருவர், இதே வேகம் சென்னையில் உள்ள வேளச்சேரி தாம்பரம் சாலையை அகல்படுத்துவதில் வந்தால் நல்லது. இந்தியில் எழுதினால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் சாலை விரிவாக்கம் செய்யாமல் இருந்தால் பலருக்கும் பாதிப்பு உண்டு என கருத்து தெரிவித்துள்ளார்.

அந்த நெட்டிசன் கூறியது போலவே, பள்ளிக்கரணை முதல் தாம்பரம் வரை உள்ள சாலை ஆக்கிரமிப்புகளால் மிக மோசமான நெரிசலில் சிக்கி தவிக்கிறது. குறிப்பாக மேடவாக்கம் மேம்பாலம் தொடங்கி பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை சாலை மிக மோசமான முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாலை மிக குறுகியதாக உள்ளதால், வாகனங்கள் ஆமை வேகத்திலேயே செல்கின்றன. இந்த சாலை வழியாகவே சோழிங்கநல்லூர் செல்ல மக்கள் முயற்சி செய்வதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. தாம்பரம் மற்றும் பள்ளிக்கரணை இடையே சாலையை அகலப்படுத்தாமல் இருப்பதை சுட்டிக்காட்டி நெட்டிசன் இந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+