வேலூர் இல்ல.. இந்த தொகுதியை தான் கேட்போம்.. திமுக கூட்டணி சீட் ஷேரிங்: போட்டு உடைத்த காதர் மொய்தீன்!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி கிடைக்கவில்லை என்றால் திருச்சி தொகுதியைக் கேட்போம் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை சீட்கள் ஒதுக்கப்படும்? எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும்? என்ற கேள்விகள் பரபரப்பாக எழுந்துள்ளன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளைப் பெறுவதை நோக்கி காய் நகர்த்தி வருகின்றன. இந்நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், சீட் பெறும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்: கடந்த வாரம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், நவாஸ்கனி எம்.பி ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகின. முஸ்லீம் லீக் கட்சி கடந்த முறையைப் போல ராமநாதபுரம் தொகுதி அல்லது வேலூர் தொகுதியைக் கேட்கக்கூடும் எனக் கூறப்பட்டது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம்பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை, ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளரே நேரடியாக களம் காண உள்ளதால் வேறு தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் அலையடிக்கின்றன. இந்நிலையில் கூட்டணியில் முஸ்லீம் லீக் எந்த தொகுதியைக் கேட்கும் என்பது தொடர்பாக ஓப்பனாக பேசியுள்ளார் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன்.
காதர் மொய்தீன்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவராக காதர் மொய்தீன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே தேசிய தலைவராக உள்ள நிலையில், இன்று மாநில தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ அபூபக்கர் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், "தமிழ்நாடு அரசு, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டக்கூடிய நல்லரசாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், நவம்பர் 16ஆம் தேதி டெல்லியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பவள விழா மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதுமுள்ள நிர்வாகிகள் கலந்து கொள்கின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்தி, முக ஸ்டாலின் ஆகியோரை அழைத்திருக்கிறோம். 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் வாழ்த்தையும் பெற இருக்கிறோம்.
மோடி பயத்தில் இருக்கிறார்: ஆளும் பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நாட்டுக்கு தேவையான ஜனநாயக ஆட்சியை, சமூக நல்லிணக்கத்தை நிலைநிறுத்தும் ஆட்சியை, சமய சார்பற்ற ஆட்சியை, அனைவருக்கும் அனைத்தும் என்ற அடிப்படையில் மக்களிடையே வேற்றுமை பார்க்காத நல்லாட்சியை கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 'இந்தியா' கூட்டணி உருவான நாள் முதல், பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் அனைத்தையும் பார்த்தாலே அவர் குழப்பத்தில் இருக்கிறார், ஆட்சி பறிபோகப் போகிறது என்ற பதற்றத்தில் இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
அடுத்த ஆண்டு வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி 52 மாவட்டங்களாக உள்ளது. இந்த 52 மாவட்டங்களையும் 9 மண்டலங்களாக உருவாக்கி, அந்த 9 மண்டலங்களிலும் டிசம்பர் மாதம் முழுக்க பயிலரங்கு நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த பயிலரங்குகளில் மாநில நிர்வாகிகள் பங்கேற்பார்கள். இந்தப் பயிலரங்குகளில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், முக்கியஸ்தர்களையும் அழைப்போம்." எனத் தெரிவித்தார்.
எந்த தொகுதியில் போட்டி?: பின்னர் செய்தியாளர்கள், நாடாளுமன்றத் தொகுதியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவீர்கள்? மீண்டும் ராமநாதபுரம் தொகுதியிலேயே போட்டியிடுவீர்களா அல்லது வேறு தொகுதியில் களம் காண்பீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த காதர் மொய்தீன், "வேலூர், ராமநாதபுரம், மத்திய சென்னை, தேனி, பெரியகுளம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் தான் இதுவரை நாங்கள் போட்டியிட்டிருக்கிறோம். கடந்த முறை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம்.

ராமநாதபுரத்தில் உள்ள எங்கள் எம்.பியை பற்றி திமுக தலைவரும், திமுக நிர்வாகிகளும் சிறப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறையும் ராமநாதபுரம் தொகுதியை கேட்போம். நிச்சயம் கேட்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. 2 தொகுதிகளைக் கேட்போம். அதில் ஒன்று ராமநாதபுரம் தொகுதி. வேலூர் தொகுதியை நாங்கள் கேட்கவில்லை. ராமநாதபுரம் கிடைக்கவில்லையென்றால் மாற்று தொகுதியாக திருச்சியை கேட்டுப் பெறுவோம்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "இந்த நாட்டில் வாழக்கூடிய முஸ்லீம்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை, அவர்களின் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை என்று வெளிப்படையாக தெரிவித்து நிற்பவர்கள் பாஜகவினர். இஸ்லாமிய சமூக வாக்குகள் ஒருபோதும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு செல்லாது. தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு என்பது ஒரு நாடகம். இந்த நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications