“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி!
சென்னை: கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தவர்கள் ட்ரெண்ட் வேறு மாதிரி இருப்பதாகச் சொன்னார்கள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைவார் என எங்களுக்கு முன்பே தெரியும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்ற நிலையில், ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத காரணத்தால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்தது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணியில் இணைந்தது. மேலும் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளோடு தவெகவிற்கு ஆதரவளித்தது மட்டுமில்லாமல் அமைச்சரவையிலும் இடம்பிடித்தன.

இந்த நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைவார் என எங்களுக்கு முன்பே தெரியும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்துள்ளது. மக்கள் பெரிய மாற்றத்தை விரும்பி வாக்களித்தனர். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் முஸ்லிம் லீக் மகளிர் அணி வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்தனர். அப்போதே என்னிடம் மகளிர் அணியினர் வந்து தெரிவித்தார்கள். கொளத்தூரில் ட்ரெண்ட் வேறு போல் உள்ளது. வீடுகளில் உள்ள பெண்கள் எல்லாம் வேறு மாதிரி பேசுகிறார்கள் என என்னிடம் தெரிவித்தனர்.
இதை திமுக வட்டாரத்தில் சொல்லியிருப்பதாகவும் கூறினார்கள். ஏதோ மாற்றம் வருவது போல பேசிக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் மத்தியில் திமுகவிற்கு ஓட்டு போடுவார்களா? என சந்தேகம் இருப்பதாகவும் கூறினார்கள். நாங்களும் இதனை திமுக தலைமையிடம் தெரிவித்தோம். பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மாற்றத்திற்கான மனநிலை இருப்பதாக தெரிவித்தோம். ஆனால் அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications