பிறந்தநாள் வாழ்த்து எழுதலாம்னு இருந்தேன்.. இப்படி மரண செய்தி.. ஜெ.அன்பழகன் குறித்து கஸ்தூரி வருத்தம்
திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனின் மறைவுக்கு கஸ்தூரி இரங்கல் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "இன்னைக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்தலாம்னு எழுத முனைகையில், இப்படி மரண செய்தி.. One more corona victim" என்று ஜெ.அன்பழகன் மறைவுக்கு நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
கடந்த 2ம் தேதி மூச்சுத் திணறலுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்.. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டது.

டாக்டர்கள் எவ்வளவோ போராடி சிகிச்சை தந்தும், அன்பழகனை காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார்... இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்பழகன் மறைவு திமுக தரப்பை மட்டுமல்லாமல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.. நன்றாக சிரித்தபடியே, கொரோனா தடுப்பு பணியில் நடமாடி கொண்டிருந்தவர் இப்படி திடீரென மறைந்துவிட்டது ஜீரணிக்கவே முடியவில்லை. அன்பழகனின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.. அதில் பெரும்பாலானோர் சொல்வது அன்பழகனின் குணத்தை பற்றிதான்.
நடிகை கஸ்தூரியும் ஒரு இரங்கல் ட்வீட் பதிவிட்டுள்ளார்.. இன்று அன்பழகனுக்கு பிறந்த நாள் என்பதால், அவருக்கு வாழ்த்து அனுப்பவும் முனைந்துள்ளார்.. அப்போதுதான் இந்த மரண செய்தி வந்துள்ளது.. இதையொட்டியே தனது ஆழ்ந்த இரங்கலையும் வெளிப்படுத்தி உள்ளார். அந்த பதிவில் அவர் சொன்னதாவது:

"அன்பழகன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவர் பூரண குணம் பெற்று வரவேண்டும் என்று எழுத முனைகையில் அன்னாரின் மரணச் செய்தி வருகிறது. One more corona victim. மிகவும் கலகலப்பாக அன்பாக பழகுவார். தி.மு.க.வுக்கு பெரிய இழப்பு. அன்னாரை பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications