தம்பி.. உனக்கு "கம்பி" உறுதிப்பா.. தினகரனை போட்டு தாக்கிய ஜெ. அன்பழகன்
ஸ்டாலினை விமர்சித்த தினகரனுக்கு ஜெ.அன்பழகன் பதிலடி தந்துள்ளார்.
Recommended Video

சென்னை: "தம்பி... என்னதான் திமுகவை திட்டி சிக்னல் கொடுத்தாலும், உனக்கு சிறை உறுதிப்பா" என்று டிடிவி தினகரனை திமுகவின் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொஞ்ச நாளாகவே திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் மோதல் வலுத்து வருகிறது. ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்கள்.
திமுக முரசொலியில் விமர்சிக்கிறது என்றால், தினகரன் ட்விட்டரில் வறுத்தெடுக்கிறார். பழைய அரசியல், குடும்ப ஊழல் என்று ஒன்றுவிடாமல் விமர்சித்த தினகரன் ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டத்தையும் விட்டு வைக்காமல் குறை கூறினார்.

மீன் விற்கிறார்
அப்போது "உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊராட்சிக் கூட்டம் போட்டிருந்தால் கிராமத்துக்கு என்ன தேவை தண்ணீர் பிரச்சினையா? சாக்கடை பிரச்சினையா? சாலைவசதி தேவையா, குளம்தேவையா குட்டைத்தேவையா? என்று கேட்டிருந்தால் ஏதாவது நன்மை கிடைத்திருக்கும். அதைவிட்டுவிட்டு கண் கெட்டப்பிறகு சூர்ய நமஸ்காரம் மாதிரி அங்கப்போய் மீன் விற்றுக் கொண்டிருக்கிறார்" என்றார்.

தினகரன் தம்பி..
இதற்குதான் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் பதிலடி தந்திருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், டிடிவி தினகரனை தம்பி என்று அழைத்திருக்கிறார். ஆனால் கூடவே 20 ரூபாய் எம்எல்ஏ என்றும் கூப்பிட்டு இடித்துரைக்கிறார்.
|
சிக்னல் தருகிறார்
அன்பழகன் தனது ட்விட்டர் பதிவில், "திமுகவை திட்டினால், பாஜக-வோடு நெருக்கமாகி விடலாம், தான் சிக்கியிருக்கும் Fraud வழக்குகளில் இருந்தும் எப்படியாவது தப்பித்து விடலாம் என்கிற கணக்கில் பாஜகவுக்கு சிக்னல் கொடுக்கிறார். தம்பி என்னதான் தி.மு.க-வை திட்டி சிக்னல் கொடுத்தாலும், சிறை உறுதி.
|
ரூ.20 எம்எல்ஏ தம்பி
தம்பி, தலைமறைவாக இருந்த காலத்தில் எங்கள் தலைவர் உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்தார். 20 ரூ MLA தம்பி, சட்டமன்ற நூலகத்தில் தமிழரசு இதழின் 2010 மே-ஜுன் இதழை வாங்கி அவர் செய்த சாதனைகளை அறியலாம்.உங்கள் சாதனைகள் என்ன என்பதை கோர்ட் கேஸ் கட்டுகளில் அறியலாம்." என்று பதிவிட்டுள்ளார்.

சூடு பிடிக்கிறது
ஏற்கனவே சூடுபிடித்து வரும் அரசியல் களத்தில் ஜெ.அன்பழகன் தனது ட்விட்டர் மூலம் மீண்டும் டிடிவியை வம்பிழுத்துள்ளார். இதற்கு டிடிவியிடமிருந்து என்ன வருகிறது என்று பார்ப்போம்!!
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications