Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொண்டனுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நின்ற ஜெ.அன்பழகன்! திரும்பி பார்ப்பதற்குள் 3 ஆண்டுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் அஞ்சாநெஞ்சனாக வலம் வந்த ஜெ.அன்பழகன் கொரோனாவால் மறைந்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மனதில் பட்டதை எதற்காகவும், ஸ்டாலின் உட்பட யாருக்காகவும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் வழக்கம் உடையவர் ஜெ.அன்பழகன்.

இன்றைய Throwback stories வரிசையில் மறைந்த ஜெ.அன்பழகனை பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.

J.Anbazhagan used to speak openly without hiding what was on his mind for anyone including Stalin.

விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ள வெங்கமூர் கிராமம் தான் ஜெ.அன்பழகனின் சொந்த ஊர். இவரது தந்தை ஜெயராமன் இளம் வயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்து தியாகராயர் நகரில் பழக்கடை தொடங்கினார். திமுகவில் பகுதிச்செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

திராவிட சித்தாந்தங்கள் மீது பற்றுகொண்ட பழக்கடை ஜெயராமன் தனது இரண்டு மகன்களுக்கும் அன்பழகன், கருணாநிதி என பெயர் சூட்டினார்.தந்தையை அடியொற்றி கட்சிப் பணிகளில் ஈடுபடத் தொடங்கிய ஜெ.அன்பழகன் திமுகவுக்காக நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைக்கத் தொடங்கினார். கருணாநிதி மீது இவருக்கு இருந்தது பக்தி என்று கூட சொல்லலாம்.

கருணாநிதியின் எண்ண ஓட்டங்களை அறிந்து அதற்கேற்றார் போல் காரியம் ஆற்றினார். திமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் ஜெ.அன்பழகனின் நிர்வகித்த பகுதியில் அமைந்திருப்பதால், மற்ற மாவட்டச் செயலாளர்களை விட இவர் தலைமைக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான்.

ஜெ.அன்பழகனை பொறுத்தவரை மனதில் பட்டதை எதற்காகவும், யாருக்காகவும் மறைக்காமல் வெளிப்படையாக பேசும் வழக்கம் உடையவர். இதன் காரணமாக இவர் பல சிக்கல்களையும் எதிர்கொண்டதுண்டு. பொதுக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், சட்டமன்ற கூட்டம் என எந்த இடமாக இருந்தாலும் அன்பழகன் பேச எழுந்தாலே அதிரடியாக தான் இருக்கும். அதேபோல் தொண்டனுக்கு ஒன்று என்றால் உதவி செய்வதில் முதல் ஆளாக முன்னுக்கு நிற்பார்.

அன்பழகன் அரசியலில் மட்டுமல்லாமல் சினிமா துறையிலும் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தார். என்ன தான் வசதி வந்தாலும் தனது தந்தை ஆரம்பக் காலத்தில் தி.நகரில் தொடங்கிய பழக்கடையை தொடர்ந்து நடத்தியவர் ஜெ.அன்பழகன். அதனை அன்பழகனின் மகன் தற்போது கவனித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+