சம்பவக்காரர் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்.. வரலாற்றில் முதல் முறையாக சட்டசபையில் பெரிய மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்டசபை நிகழ்வுகள் தினமும் காலை 10 மணிக்குத் தொடங்கி, அதிகபட்சமாக மாலை 4 மணி வரை நடப்பதே வழக்கமாக இருந்தது. ஆனால், வரலாற்றிலேயே முதல்முறையாக 10 மணி நேரம் தொடர்ந்து தமிழக சட்டசபை நடந்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் தவெக ஆட்சியில் சட்டசபை விவாதங்கள் விஷயத்தில் புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, அவை நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக நேரலை செய்யப்படுவதுடன், அனைத்து உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கு உரிய வாய்ப்பும் அளிக்கப்படுகிறது. இதனால் மானியக் கோரிக்கை விவாதங்கள் ஆரோக்கியமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெறுகின்றன.

J C D Prabhakar s historic initiative Assembly proceedings stretch till 7 PM for the first time

கடந்த காலங்களில் தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் காலையில் 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 3 அல்லது 4 மணி வரை மட்டுமே நீடிக்கும். மேலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாதபோது, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்வது வழக்கமாக இருந்தது. பின்னர் சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் வந்து விவாதத்தில் பங்கேற்பார்கள். இது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறையாகவே பார்க்கப்பட்டது. எனினும், ஆளுங்கட்சியினர் பேசுவது மட்டுமே நேரலையில் காட்டப்படுவதாகவும், எதிர்க்கட்சியினர் பேசுவது சரியாகக் காட்டப்படுவதில்லை என்றும் முந்தைய காலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆனால் தற்போது இருதரப்புப் பேச்சுகளும் எந்தவித வெட்டுக்களும் இன்றி நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் விவாத நேரமும் வெகுவாக அதிகரித்துள்ளது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், வரலாற்றிலேயே அபூர்வமாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளே அவைக்குறிப்பிலிருந்து அடிக்கடி நீக்கப்பட்டு வருகின்றன.

சட்டமன்றத்தில் கேள்வி நேரம் இல்லாத சூழலைச் சுட்டிக்காட்டி, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கடந்த சில தினங்களாக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி, அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகளின்போது, வெட்டுத் தீர்மானத்தில் பெயரைக் கொடுத்திருந்த எம்.எல்.ஏ-க்கள் விவாதித்த பிறகும், வாய்ப்பு கிடைக்காத மற்ற எம்.எல்.ஏ-க்களையும் அழைத்து அவர்களின் தொகுதி சார்ந்த கோரிக்கைகளைப் பேச அனுமதித்து வருகிறார்.

இந்த நல்வாய்ப்பினால் தினமும் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் அவையில் பேசி, தங்களது தொகுதியின் மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைக்க முடிகிறது. அவற்றுள் சில கோரிக்கைகளுக்கு உடனடிப் பதிலும் கிடைத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், காலையில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை அரசு அதிகாரிகளிடமிருந்து பெற்று, மாலையிலேயே அறிவிப்புகளாக வெளியிட்டார். இதனை வெகுவாகப் பாராட்டிய சபாநாயகர், "இதுதான் ஒரு அமைச்சரின் பொறுப்புக்கு மிகச்சிறந்த உதாரணம்" என்று புகழாரம் சூட்டினார்.

எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் கேள்விகள் கேட்க அனுமதி வழங்கப்பட்டு வருவதால், அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாட்களாகவே மாலை 6 மணியைத் தாண்டி நீடித்து வந்தது. இதன் உச்சமாக நேற்று காலை 9.30 மணிக்குத் தொடங்கிய அவை, இரவு 7.13 மணி வரை நீடித்தது. அந்த வகையில் சுமார் 10 மணி நேரம் அவை அலுவல்கள் இடைவெளியின்றி நடைபெற்றுள்ளன. தமிழக சட்டசபை வரலாற்றிலேயே தொடர்ந்து இவ்வளவு நீண்ட நேரம் அவை நடைபெற்றது இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது.

பெரும்பாலான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அன்றைய தினமே பதில் கிடைக்கவில்லை என்றால், "மறுநாள் பதில் அளிக்கப்படும்" என்று அமைச்சர்கள் உறுதியளிக்கின்றனர். இதன் காரணமாகத் துறை சார்ந்த அதிகாரிகள் அவையிலேயே அமர்ந்து, எம்.எல்.ஏ-க்களின் பேச்சுகளைக் குறிப்பெடுத்து அமைச்சர்களுக்குப் பதிலளிக்கத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+