ஜாபர்சேட்டுக்கு கல்தா?.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி?
சென்னை: தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபியாக ஜே கே திரிபாதி நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தமிழக காவல் துறையின் டிஜிபியாக இருப்பவர் டிகே ராஜேந்திரன். இவரது பதவிக்காலம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது.
இந்த நிலையில் டிஜிபி டிகே ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. ஆனால் குட்கா, பான்மசாலா ஊழல் வழக்கில் டிகே ராஜேந்திரனின் பெயர் அடிப்பட்டுள்ளதால் அவரை மீண்டும் டிஜிபியாக நியமிக்கக் கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

நியமனம்
இந்த நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரது பதவிக்காலம் வரும் 30-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் அடுத்த டிஜிபியாக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

யூபிஎஸ்சி
இதையடுத்து பணிமூப்பு அடிப்படையில் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேச், லட்சுமி பிரதாத், அசுதோஷ் சுக்லா, மித்திலேஷ்குமார் ஜா, தமிழ்ச் செல்வவன், ஆசிஷ் பங்ரா, சைலேந்திர பாபு, ரமேஷ் குடாவாலா, விஜயகுமார் , கரன் சின்ஹா, பிரதீப் பிலிப் ஆகியோரின் பெயர் பட்டியலை தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே யூபிஎஸ்சிக்கு அனுப்பியது.

யூபிஎஸ்சி அலுவலகம்
உச்சநீதிமன்ற உத்தரவின்படி 6மாதங்களுக்குள் ஓய்வு பெறுவோரை டிஜிபியாக நியமிக்கக் கூடாது. இதனால் ஜாங்கிட், காந்திராஜன், ரமேஷ் குடாவாலா ஆகியோர் 6 மாதங்களுக்குள்ளாகவே ஓய்வு பெறுவதால் அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கான ஆலோசனை கூட்டம் டெல்லியில் யூபிஎஸ்சி அலுவலகத்தில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் நடைபெற்றது.

ஜாபர்சேட்
இதையடுத்து சென்னை ஆணையராகவும் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றிய திரிபாதியின் பெயரும் சிபிசிஐடி தலைவரான ஜாபர்சேட்டின் பெயரும் முதல் இரு இடங்களில் உள்ளன. இந்த நிலையில் திரிபாதியை நியமிக்க வேண்டும் என மத்திய அரசும் ஜாபர்சேட்டை நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணிமூப்பு அடிப்படையில் ஜே கே திரிபாதிக்கு காவல் துறை டிஜிபி பதவி வழங்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications